விராட் கோலிக்கு ஒரு பாகிஸ்தான் எப்படியோ.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு நியூசிலாந்து அப்படி.. என்னா அடி அடிச்சிருக்கான்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதல் செய்ய பணிக்கப்பட்டது. பின்னர் வந்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை சேர்த்தது. 

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயரின் மாஸ் ஆட்டம்

- Advertisement -

சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 98 பந்துகளில் 79 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்களையும், அக்சர் படேல் 61 பந்துகளில் 42 ரன்களும் விளாசினர். அதேபோல் நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீச்சு செய்த ஹேன்றி 8 ஓவர்களில் 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். 

- Advertisement -

டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது, ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பை எடுத்து கொண்டு சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களை விளாசியதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

நியூசிலாந்து அணினா அடிப்போம்

- Advertisement -

இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்களில் மட்டும் சிறப்பாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த முறை உலகக்கோப்பை தொடரின் போதும் கூட மும்பை மைதானத்தில் அபார சதத்தை விளாசினார்.

கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய 8 போட்டிகளில் 2 சதங்கள், 4 அரைசதங்களை விளாசி அசத்தி இருக்கிறார். 2 போட்டிகளில் மட்டுமே அரைசதத்திற்கு குறைவான ரன்களை அடித்துள்ளார். இதனால் விராட் கோலி எப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறாரோ, அதுபோல் ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிராக பயங்கரமாக விளையாடுவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles