இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த ஷிகர் தவான் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் முழுமையாக தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக இந்திய கிரிக்கெட்டில் இவரின் பங்கு மிகப் பெரியது.
இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் செய்த சாதனைகள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய பங்காற்றி இருக்கும்.
2010ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமான தவான் அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டு முழு நேர துவக்க ஆட்டக்காரர் ஆக மாறினார். இதற்கு முக்கிய காரணம் இவர் ஒரு இடது கை ஆட்டக்காரராக இருப்பது ஆகும். ஏனென்றால் வலது கை ஆட்டக்காரராக ரோஹித் சர்மா இருக்கும்போது எப்போதெல்லாம் அவர் அழுத்தத்திற்கு உள்ளாகிறாரோ அப்போதெல்லாம் தவான் தனது பேட்டிங் மூலம் அந்த அழுத்தத்தினை போக்கியிருக்கிறார்.
ஒரு நாள் போட்டி வடிவத்தில் மொத்தமாக 167 போட்டிகளில் விளையாடி 17 சதம் மற்றும் 39 அரை சதம் என 6793 ரன்கள் குவித்திருக்கிறார். அவருடைய சராசரி 44 ரன்கள் ஆக இருந்திருக்கிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து சதங்கள் மற்றும் ஏழு அரை சதங்கள் அடித்து இருக்கிறார். மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 24 சதங்கள் விளாசி இருக்கிறார். மேலும் ரோகித், விராட் மற்றும் கோலி ஆகிய மூவரும் சேர்ந்து மொத்தமாக 2013ஆம் ஆண்டிலிருந்து 19ஆம் ஆண்டு வரை 100 சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இது குறித்து தவான் விரிவாக கூறும்போது “நாங்கள் அழகான ஒரு பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாக இருக்கிறோம். நான், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சேர்ந்து 5 ஆண்டுகளில் 100 சதங்கள் அடித்திருப்போம் என்று நினைவிருக்கிறது. அப்போது ரவி சாஸ்திரி எங்களுக்கு பயிற்சியாளராக திகழ்ந்தார். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தேசிய கிரிக்கெட் அகாடமி ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
இதையும் படிங்க:ரொம்ப பாவம்.. அதிரடியா ஆடியும் டிராவிட் மகனால் ஐபிஎல் 2025 ஆட முடியாது.. பிசிசிஐ விதியால் வந்த வினை
காயத்திற்கு பிறகு எப்படி அதிலிருந்து மீண்டு வர வேண்டும், எவ்வாறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிறைய எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதன் மூலம் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நிறைய பங்களிப்பினை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். டங்கன் ப்ளட்சர், சஞ்சய் பாங்கர், விக்ரம் ரத்தோர் மற்றும் ராகுல் டிராவிட் பீல்டிங், பேட்டிங் என அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

