சின்ன ருதுராஜ்.. அப்படியே சிஎஸ்கே கேப்டனை நகலெடுத்த ஷேக் ரஷீத்.. பாராட்டும் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதுவரை சிஎஸ்கே அணி ஆடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் கம்பேக் கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதனிடையே சிஎஸ்கே அணி தரப்பில் 20 வயதான இளம் வீரரான ஷேக் ரஷீத் அறிமுகம் செய்யப்பட்டார்.

- Advertisement -

ஷேக் ரஷீத் அறிமுகம்

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 49 பந்துகளில் 63 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 30 ரன்களையும் குவித்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் ஜடேஜா மற்றும் பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

இதன்பின் சிஎஸ்கே அணிக்காக ஷேக் ரஷீத் – ரச்சின் ரவீந்திரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிஎஸ்கே அணியின் பெஞ்சில் இருந்த ஷேக் ரஷீத், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியதால் அவரின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப அவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.

- Advertisement -

சின்ன ருதுராஜ்

அதிலும் ஷர்துல் தாக்கூர் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஷேக் ரஷீத் விளாசியது ஆச்சரியத்தை கொடுத்தது. அதுவும் தாறுமாறாக பேட்டை விடாமல் தரமான கிரிக்கெட் ஷாட்களுடன் பவுண்டரிகள் அடித்தது பாராட்டுகளை பெற்றது. முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில், ஆவேஷ் கான் வீசிய பந்தில் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 

இவரின் ஆட்டம் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ போல் அப்படியே இருந்தது. கால்களை நகர்த்துவது தொடங்கி ஷாட்களை ஆடுவது வரை அப்படியே ருதுராஜ் கெய்க்வாடை போலவே ஆடி இருந்தார். இதனால் சிஎஸ்கே அணியிலேயே சின்ன ருதுராஜ் கெய்க்வாட் தயாராகிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles