டேய் லார்ட் போதும்டா… தமிழக அணிக்காக அஸ்வின் கோரிக்கை.. என்ன நடந்தது.?

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியக் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெறும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.

- Advertisement -

இதில் மும்பையில் நடந்து வரும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி மும்பை அணி வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

- Advertisement -

இதில் தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் குவித்தனர். மும்பை அணியின் பந்துவீச்சில் தாகூர், தனுஷ்கூட்டியான் மற்றும் முசீர் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், துஷார் தேஷ் பாண்டே மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதன்பிறகு பேட்டிங் செய்த மும்பை அணியில் முசீர்கான் 55 ரன்களும், மற்ற பேட்ஸ்மேன்கள் துரிதமாக ரன்களைச் சேர்க்க ஆட்டத்தின் திருப்புமுனையாக ஆல் ரவுண்டர் சர்துல் தாகூர் விளையாட வந்தார். மிகச் சிறப்பான ஆட்டத்தினை விளையாடிய சர்துல் தாகூர் தமிழக அணியின் சுழற் பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு இரண்டையும் அடித்து நொறுக்கி அபார சதம் அடித்தார்.

அவர் 105 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்து வேகப்பந்து பேச்சாளர் குல்தீப் சென் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இவரின் அபார் ஆட்டத்தின் உதவியுடன் தற்போது மும்பை அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இவரின் அபார ஆட்டத்தினை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் “டேய் லார்ட் மாட்டிறைச்சி! போதும்டா” என்று தாக்கூரின் பேட்டிங்கை பாராட்டியும், அதே வேளையில் தமிழக அணிக்காக இதோடு நிறுத்திக் கொள் என்பது போலவும் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் தற்போது அஸ்வினின் ட்வீட்டை வைரலாக்கி வருகின்றனர். சர்துல் தாகூர் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக இடம் பெறவில்லை. தற்போது அவரின் அதிரடி இன்னிங்ஸ் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தனது பெயரை உரக்கத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில் இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது. எனவே இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles