சிஎஸ்கே நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இப்போ வேற லெவல்ல இருக்காங்க.. செலக்சன் சரியா பண்ணுங்க.. ஆர்சிபியை எச்சரிக்கும் வாட்சன்

18 வது ஐபிஎல் கிரிக்கெட் லீக் திருவிழாவில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதில் சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்த மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் லீக் இறுதிப் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை சென்னை அணி பெங்களூர் அணியை விட சற்று வலுவான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக சென்னை மைதானம் இருப்பதால், ஜடேஜா, அஸ்வின் மற்றும் நூூர் அகமது போன்ற தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதனால் பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பெங்களூர் அணி சிக்கலில் மட்டும் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் ஷேன் வாட்சன் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பெங்களூர் அணி சென்னை மைதானத்திற்கு செல்வது அவர்களுக்கு பெரிய சவாலாக அமையும். ஏனென்றால் சென்னை அணியின் பந்துவீச்சை பார்க்கும்போதே பெங்களூர் அணியில் சில மாற்றங்கள் செய்யக்கூடியவையாக கூட இருக்கலாம். ஆனால் அதில் பெங்களூர் அணி கவனமாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் பெரிய சிக்கலாகிவிடும். சென்னை அணியின் அமைப்பை பொருத்தவரை முழுவதும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக இருக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:அடுத்த எல்லா உலகக்கோப்பைகளும் இந்திய அணிதான் வெல்லும்.. உலக நாடுகளே இப்பவாச்சும் முழிச்சுக்கோங்க – இங்கி மைக்கேல் வாகன்

மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியின் 3 பந்துவீச்சாளர்களும் சிறப்பாக இருந்தனர். இது அவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கும். மேலும் சிஎஸ்கே அணியின் நூர் அகமது சிறப்பாக செயல்பட்டது அந்த அணிக்கு பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கக் கூடிய வகையில் இருந்திருக்கும் என்று வாட்சன் கூறியிருக்கிறார். பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி தற்போது வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு வலுவான அணிகள் மோதலால் இந்த போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு சுவாரசியமாக இருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles