இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இனி வரும் உலக கோப்பைகளை இந்திய அணி தான் கைப்பற்றும் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பஞ்சாப் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்யும் விதத்தையும் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அதற்குப் பின்னர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல்வாகன் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு புத்திசாலித்தனமான வீரர், அவர் ஏன் இந்திய அணியில் இல்லை என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டதுண்டு. அவர் குஜராத் அணிக்கு எதிரான முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். மேலும் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் மிக எளிமையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவர்களால் இவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. மேலும் அவர் ஷார்ட் பந்துகளை அடித்து விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மேலும் அவர் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அருமையாக விளையாடினார். சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தரையோடு அடித்து விளையாடும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் இடம் கொடுத்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய கிரிக்கெட் அணி இந்த நிலையில் இருப்பது உலக கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு கவலையான விஷயமாகும். இந்திய அணி டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
இதையும் படிங்க:அவசரப்பட்டுவிட்டேன்.. தோல்விக்கு நானும் ஒரு காரணம்.. ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!
மேலும் அடுத்த டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அது சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே இதனால் பெரிதாக இந்திய அணியில் மாற்றம் இருக்காது. மேலும் இந்திய அணி விளையாடக்கூடிய விதத்தை பார்த்தால் 30 வீரர்கள் வெளியில் இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மற்ற அணிகள் இந்திய அணிக்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விஷயமாகும் ” என்று அவர் பேசியிருக்கிறார்.

