தரமான பந்துவீச்சாளருக்கான 2 முக்கிய திறமைகள் நடராஜனிடம் இருக்கிறது.. அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஆச்சரியம்.. கூறுகிறார் ஷேன் வாட்சன்

ஐசிசி டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் இருக்கும் நிலையில் இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை துணைக் கேப்டனாக நியமித்தது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் உலகக்கோப்பையில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய இவர் அதற்குப் பிறகு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில் மிக சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

உலகக் கோப்பை காண இந்திய அணி வீரர்கள் தேர்வு பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதில் முக்கியமாக பார்க்கப்படுவது பினிஷிங் ரோலில் களமிறங்கும் ரிங்கு சிங்கை தேர்வு செய்யாதது. சமீப காலமாக இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் இவரை தேர்வு செய்யாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் பந்துவீச்சை பொறுத்த வரையில் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா ஒருவர் மட்டுமே நம்பிக்கையானவர் ஆக தெரிகிறார். மேலும் முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் ஐபிஎல்லில் சுமாராக செயல்பட்டு வரும் நிலையில் அவர்களை தேர்வு செய்ததும் சன்ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கும் நடராஜனை தேர்வு செய்யாததும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் யார்க்கர் பந்துகளை வீசுவதிலும், பந்துவீச்சில் வேரியேஷன்கள் காட்டுவதிலும் பும்ராவுக்கு நிகராக இருக்கிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திலும் இவரே இருக்கிறார். எனவே இவரை தேர்வு செய்யாதது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறும்பொழுது
“நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இப்போதுள்ள பந்துவீச்சாளர்களில் பும்ராவுக்கு அடுத்தபடியாக நம்பிக்கையானவர் ஆக நடராஜன் இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஆட்டத்தின் இக்கட்டான சூழ்நிலைகளில் யார்க்கர் பந்துகளை வீசுவதிலும், பந்துவீச்சில் வேரியேஷன்கள் காட்டுவதிலும் திறமையானவராக இருக்கிறார். அவரை இந்திய அணி தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக் கூடிய முக்கியமான கடைசி கட்டத்தில், மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்குமா குட்டி ஹர்திக் பாண்டியாவுக்கு.? தீபக் சாகர் காயம் காரணமாக விலகல்.. பஞ்சாப் போட்டியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

அவர் சிறப்பாக செயல்படும் போது இந்திய கிரிக்கெட்டல் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறி இருக்கிறார். நடராஜன் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இல்லாததால், வேறு ஏதேனும் பந்துவீச்சாளர் காயத்தை சந்தித்தால் கூட நடராஜனுக்கு உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles