இது என்ன நியாயம்… ரஜத் பட்டிதாருக்கு சம்பள காண்ட்ராக்ட்.. சர்ப்ராஸ் ஜூரேல்க்கு இடம் இல்லை.. காரணத்தை சொன்ன பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தைத் தற்போது அறிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெற்று உள்ளனர். இவர்களின் ஊதியம் 7 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகிய முன்னணி வீரர்கள் குரூப் ஏ பிரிவிலும், சூரியகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் பி பிரிவிலும், ஏனைய புதுமுக வீரர்கள் சி பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர். இதில் புதுமுக வீரரான ரஜத் பட்டிதார் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் ஓரளவு அனுபவ வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிசான் ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் இருவரின் பெயரும் சம்பளப் பட்டியலில் இடம்பெறவில்லை. பிசிசிஐ இன் ஆலோசனையை ஏற்க மறுத்து, ரஞ்சி டிராபியில் விளையாடாமல் ஐபிஎல்லில் விளையாடுவதற்குத் தயாராகி வருவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர்களது பெயரை சேர்க்கவில்லை.

- Advertisement -

இவர்களுடன் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான சர்ப்ராஸ் கான் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோர்களது பெயர்களும் இடம்பெறவில்லை. ஆனால் புதுமுக வீரரான ராஜத் பட்டிதாரின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில், இதற்குத் தகுந்த விளக்கம் கொடுத்துள்ள பிசிசிஐ அக்டோபர் 1 2023 முதல், செப்டம்பர் 1 2024 வரையிலான குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒரு நாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் ஒரு வீரர் விளையாடி இருக்க வேண்டும்.

அப்போதுதான் அவரின் பெயர் சம்பளப் பட்டியலில் இடம் பெறும். விகித அடிப்படையில் ஒரு வீரரின் பெயர் குரூப் சி பிரிவில் சேர்க்கப்படும். ரஜத் பட்டிதார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். அவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவரது பெயர் குரூப் சி பிரிவில் இடம்பெற்று இருக்கிறது.

- Advertisement -

துருவ் ஜுரேல் மற்றும் சர்பராஸ்கான் ஆகியோர் இரு டெஸ் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடும் பட்சத்தில் அவர்களது பெயர்களும் குரூப் சி பிரிவில் இடம் பெறும்.

சர்ப்ராஸ் கான் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்துள்ளார். துருவ் ஜுரேல் நான்காவது டெஸ்டில் இக்கட்டான சூழ்நிலையில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் குவித்தும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் குவித்தும் இந்திய அணி வெற்றி பெற உதவினார். இவர்கள் ஐந்தாவது டெஸ்டில் களமிறங்கும் பட்சத்தில் குரூப் சி பிரிவில் இடம் பெறுவார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles