வெறும் 7 சிக்ஸ்.. தோனியின் சாதனையை முறியடிக்க.. சாம்சனுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு.. இங்கி டி20..முழு விபரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டி20 போட்டிகளில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 7 சிக்ஸர்கள் அடிப்பதன் மூலமாக மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி டி20 உலக கோப்பையை வென்றதோடு அதற்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற சூரியகுமார் யாதவ் அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக சஞ்சு சாம்சன் சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அடுத்ததாக நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ள நிலையில் இந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 7 சிக்ஸர்கள் அடிப்பதன் மூலமாக மகேந்திர சிங் தோனியின் மகத்தான சாதனையை சஞ்சு சாம்சன் முறியடிக்க காத்திருக்கிறார்.

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி இதுவரை 98 போட்டிகளில் விளையாடி 52 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். சஞ்சு சாம்சன் இதுவரை 37 டி20 போட்டிகளில் விளையாடி 46 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். எனவே அவருக்கு தோனியின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் 6 சிக்ஸர்கள் தேவைப்படுகிறது. இன்னும் ஒரு சிக்சர் சேர்த்து அடித்தால் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் சாம்சன் முதலிடத்தில் இருப்பார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க:ரொம்ப எல்லை மீறி போறீங்க பிசிசிஐ.. எங்க பெயரைக் கூட போட்டுக்க முடியாதா.. பாக் முக்கிய அதிகாரி கேள்வி

இன்று நடைபெறவுள்ள முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. பேட்டிங்க்கு சாதகமான இந்த மைதானத்தில் இரண்டு அணிகளும் பேட்டிங்கில் சம பலம் வகிப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும் போட்டி இந்திய நேரப்படி இரவு மணிக்கு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய முகமது சமி இன்றைய முதல் போட்டியின் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles