ரொம்ப எல்லை மீறி போறீங்க பிசிசிஐ.. எங்க பெயரைக் கூட போட்டுக்க முடியாதா.. பாக் முக்கிய அதிகாரி கேள்வி

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் இருப்பதாக சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி எனப்படும் மினி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி முதலில் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தது. இதற்குப் பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகள் ஹைபிரிட் மாடலில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்த அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்த நிலையில் துபாயில் போட்டியில் மாற்றப்பட்டது.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்தத் தொடரின் அறிமுக விழாவில் அனைத்து கேப்டன்களும் பங்கேற்க வேண்டிய நிலையில் ரோஹித் சர்மா இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் போர்டு வலியுறுத்த அதற்கு இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. மேலும் இதன் உச்சமாக ஒரு தொடரை எந்த நாடு நடத்துகிறதோ அந்த நாட்டின் பெயரை மற்ற நாடுகளின் அணிகள் விளையாடும் ஜெர்சியில் பதிய வேண்டும். அப்போது முதல் இப்போது வரை இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயர் பதிய மறுத்துள்ளது.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சொன்ன அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் தற்போது பாகிஸ்தான் பெயரை கூட இந்திய ஜெர்சியில் பதிய மறுத்திருப்பது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதற்கு ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:150 கீமீ பந்தை ஆடவே தெரியாதவர்கள் எல்லாம்.. இதை சொல்லலாமா?.. கடுப்பான ஷ்ரேயாஸ் ஐயர்.. நடந்தது என்ன.?

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் பேசும்போது ” இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியலை உள்ளே கொண்டு வருகிறது. இது முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது கிடையாது. முதலில் பிசிசிஐ பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்தது. அதற்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தது. இப்போது தொடரை நடத்தும் பாகிஸ்தான் லோகோவையும் இந்திய ஜெர்சியில் பதிய மறுப்பு தெரிவித்திருக்கிறது என்று தெரிகிறது. இது உலக கிரிக்கெட் நடத்தும் ஐசிசி ஏற்று கொள்ளாது என்று நம்புகிறோம். மேலும் இது பாகிஸ்தான் அணிக்கு என்ன நியாயமோ அதை ஐசிசி பெற்று தரும் என்று நம்புகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles