இந்திய அணியில் தொடர்ந்து ஒருநாள் அணிக்காக நான்காவது இடத்தில் களமிறங்கி வருகிறார் ஷ்ரேயாஸ். இவர் சுழபந்துப்பந்து வீச்சில் அபாரமாக ஆடகூடியவர் என்று பெயர் பெறும் அளவிற்கு நன்றாக விளையாடியும் வந்தார்.
இப்படி இருக்கையில், இந்திய அணி வெளிநாடுகள் சென்று விளையாடும் பொழுது “ஷார்ட் பிட்ச்” பந்துகளில் வெளியேற தொடங்கினார். இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் மத்தியில் இவரது ஆட்டம் குறித்து பல விமர்சனங்கள் வர தொடங்கியது.
இதை தொடர்ந்து, பல எதிர் அணிகளும் இந்த யுக்தியை கொண்டு அவரை ஆட்டமிழக்க வைத்து வந்தன.
ரசிகர்கள் விமர்சனம் ஷ்ரேயாஸ் பதில்
ஷ்ரேயாஸ் மீது அதீத விமர்சனங்கள் எழுந்த நிலையில் பத்திரிகையாளர்கள் இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது “ஒரு மணி நேரத்திற்கு 150 கிமீ வேகத்தில் வரும் பந்துகளை விளையாட தெரியாதவர்கள் எல்லாம் என்னை குறித்து குறிப்பிட்ட முறையில் விளையாடுங்கள் என்று அறிவுரை கூறுவது எரிச்சலூட்டுகிறது” என்றார்.
மேலும் பேசிய அவர் “ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் பேசுவதற்கான உரிமை உள்ளது, ஆனால் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளலாம், நேரடியாக வீரரிடம் அல்ல” என காட்டமாக தெரிவித்தார்.
பலவீனத்தை சமாளிக்க பயிற்சி எடுத்து வரும் ஷ்ரேயாஸ்
இந்திய அணிக்காக சிறப்பான முறையில் விளையாடி வரும் ஷ்ரேயாஸ் ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் நான்காவது இடத்தில் களம் காணும் வீரர்களில் சிறந்த வீரராக இருக்கிறார் என்றாலும் அது மிகையல்ல.
ஆனாலும் அவரின் பலவீனத்தை சரி செய்து கொள்ள பல பயிற்சிகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது “ஆம், நான் தோள்பட்டை மற்றும் இடுப்புப் பகுதியை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்த நிறைய வீடியோக்களை YouTube-ல் பார்த்திருக்கிறேன். அதிரடி ஆட்டம் ஆடும் விஷயத்தில் அது எனக்கு நிறைய உதவியது. இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது, குறிப்பாக T20 போட்டிகளில் எந்த தருணத்திலும் நீங்கள் உங்கள் அட்டத்தின் போக்கை மாற்றி ஆட வேண்டும்” என்று கூறினார்.

