இந்திய t20 அணியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் தன்னுடைய இடத்துக்கு குறி வைத்திருப்பதாக சஞ்சு சாம்சன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அபினவ் முகுந்த் உடனான பேட்டியில் பேசியுள்ள சஞ்சு சம்சன் இஷான் கிஷான் குறித்து மிகவும் வெளிப்படையான முறையில் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது “உண்மையில் நாங்கள் எல்லோரும் ஆச்சரியப்படும் இடத்தில் இஷான் கிஷான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் அளிக்கும் கொண்டுவரப்படுவார் என நாங்கள் யாருமே நினைக்கவில்லை”
“அவரும் என்னை போல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தேன். மேலும் அவர் அணிக்குள் வந்தது மட்டும் இல்லாமல் ரன் குவிக்கவும் ஆரம்பித்தார். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் அவர் என் இடத்திற்கு குறி வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

