ரோஹித் சர்மாவின் வெற்றி ரகசியம் இது தான்.. இளைஞர்கள் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.. கூறுகிறார் சஞ்சு சாம்சன்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி தற்போது தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து இந்திய அணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றில் தங்களது முதல் போட்டியாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள் ரோஹித் சர்மா குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர் இது குறித்து ரிஷப் பண்ட் கூறும் பொழுது
“கிரிக்கெட் பொறுத்தவரை முன்னேற்றம் என்பது வித்தியாசமான முறையில் தான் இருக்கும். நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிறைய கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறார். இருந்தாலும் அவர் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா குறித்து சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது
“ரோஹித் சர்மா தனது விளையாடை நன்கு புரிந்து கொண்டு விளையாடுகிறார். எப்போதெல்லாம் அவருக்கு சிக்கல் ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம் கிரிக்கெட்டின் அடிப்படை விஷயங்களில் அவர் கவனம் செலுத்துகிறார்.

இதுதான் ரோகித் சர்மாவிடம் நான் மிகவும் விரும்பக்கூடிய விஷயமாகும்” என்று கூறியிருக்கிறார். ரோஹித் குறித்து சஞ்சு சாம்சன் கூறும் பொழுது
“ரோஹித் சர்மா ஒரு அற்புதமான வீரர். இளைஞர்களாகிய நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் என்னவென்றால் நாம் எப்போதும் நமது சுயத்துடன் இருப்பதே ஆகும்.

- Advertisement -

எத்தனை கேமராக்கள் அவரை பார்க்கின்றன? ஸ்டம்ப் மைக்குகள் எங்கு இருக்கின்றன? என்பதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவே மாட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அவராகவே இருப்பார். அவரது இந்த குணம் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இளைஞர்கள் இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:4 நாடுகளில் இவர்தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்.. இந்த ஒன்னு மட்டும் பண்ணிடுங்க போதும்.. லட்சுமிபதி பாலாஜி பேட்டி

ரோகித் சர்மா குறித்து குல்தீப் யாதவ் கூறும் பொழுது
“இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவை விரும்பாத ஆள் என்று யாருமே இல்லை. அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். இந்த ஒரு விஷயம் தான் அவர் குறித்து மிகவும் முதன்மையாக பார்க்கப்படும் ஒன்றாகும்” என்று கூறியிருக்கிறார். தற்போது ரோகித் சர்மாவுக்கு 35 வயதுக்கு மேல் ஆகி வருவதால் இந்த டி20 உலக கோப்பையை அவருக்கு கடைசியாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் விடை பெறுவதற்கு முன்பாக இந்திய அணிக்காக ஒரு ஐசிசி கோப்பையாவது வென்று கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இந்த உலகக் கோப்பையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles