4 நாடுகளில் இவர்தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்.. இந்த ஒன்னு மட்டும் பண்ணிடுங்க போதும்.. லட்சுமிபதி பாலாஜி பேட்டி

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை வெற்றி பெற்று நான்காவது போட்டியில் மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசிய நாடுகளில் இவர்தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றும், அணிக்காக இந்த ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என்று லட்சுமிபதி பாலாஜி கூறி இருக்கிறார்.

- Advertisement -

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா ஒருவர் மட்டுமே. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் சரி, அல்லது பேட்டிக்கு சாதகமாக இருந்தாலும் சரி அவ்வளவு எளிதில் ரன்களை விட்டு தர மாட்டார். தனது துல்லியமான வேகம் மற்றும் லைன் அண்ட் லெந்த் டெலிவரிகளால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சனையை இவரால் உருவாக்க முடியும்.

- Advertisement -

ஆடுகளத்தில் இவர் வீசும் ஒரு சில பந்துகளிலேயே, அதன் தன்மையை கணித்து விடுவதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமேதான். டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவ தொடர்களிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்காக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தற்போது டி20 கிரிக்கெட் இந்திய அணிக்காக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ராவை இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி பும்ரா குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும் பொழுது
” வாசிம் அக்ரம் அல்டிமேட் ஆன பந்துவீச்சாளர். அவருக்குப் பிறகு சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா மட்டுமே. பும்ரா அவரது பெருமைகளை துரத்திச் சென்று அடைவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன். பும்ரா இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்று தரவேண்டும் என்பது எனது ஆசை.

- Advertisement -

பும்ரா மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள். அவர்கள் வேகப்பந்து வீச்சையே சிறப்பானதாக மாற்றி இருக்கிறார்கள். இருவரது பந்து வீச்சுமே மிகவும் அபாரமாக இருக்கும். பும்ரா தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான பந்துவீச்சாளராக இருக்கிறார்.

இதையும் படிங்க:இவருக்கெல்லாம் டீம்ல எப்படி இடம் கிடைச்சது.. இந்தியா எல்லாம் கண்டிப்பா எடுக்க மாட்டாங்க.. மைக்கேல் வாகன் விமர்சனம்

பும்ராவிற்கு சிவப்பு பந்து, வெள்ளை பந்து என்கிற வேறுபாடு எல்லாம் கிடையாது. எந்தப் பந்தாக இருந்தாலும் சரி தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். புதிய பந்தை கொடுத்தால் அற்புதமாகவும் அந்த பந்து தேய்ந்தால் அபாரமாக ரிவர்ஸ் ஸ்விங்கும் செய்யக்கூடியவர். மேலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் அற்புதமாக பந்து வீசுவார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles