அடுத்த வருடம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சாம்சன் சென்னை அணிக்கு வந்ததும் செய்திருக்கும் செயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் நோக்கில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு மாற்றி அங்கிருந்து சாம்சனை 18 கோடி ரூபாய்க்கு ட்ரேடிங் செய்தது. இந்த சூழ்நிலையில் சாம்சன் சென்னை அணிக்கு வந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை பிளாக் செய்திருக்கிறார் என்கிற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. சென்னை அணிக்கு வந்ததும் அவர் ராஜஸ்தான் அணியுடன் பதிவுகளை நீக்கியும், மேலும் அந்த அணியின் பதிவுகளில் தான் செய்திருந்த லைக் மற்றும் கமெண்ட்களை நீக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:இதுதான் உனக்கு சோறு போடுது.. இனி ஒரு நாளும் இப்படி பண்ணாத.. சச்சின் சொன்னதைக் கேட்டு மனம் மாறிய யுவராஜ் சிங்.. நடந்தது என்ன?
இதனை தெளிவாக ஆராயும் போது சாம்சன் ராஜஸ்தான் ராயல்சின் சமூக வலைதள பக்கத்தை பிளாக் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சாம்சன் மற்றும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே திரைக்குப் பின்னால் பெரிய பிரச்சனை எழுந்திருக்க கூடும் என்று யூகிக்கப்படுகிறது. இதனால்தான் பல வருடங்களாக விளையாடியும் ராஜஸ்தான் அணி இவரை விடுவிக்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

