இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். யுவராஜ் சிங்கிற்கு எப்போதுமே சச்சின் டெண்டுல்கர் மீது அளவு கடந்த அன்பு மரியாதையும் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் யுவராஜ் சிங் ஒருமுறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியேறி அந்த கோபத்தை தன் பேட்மீது வெளிப்படுத்தினார். அதாவது தான் அவுட் ஆகிவிட்டு பேட்டை போட்டு தரையில் அடித்து உடைத்தார். இதைக் கண்ட சச்சின் டெண்டுல்கர் அப்போது யுவராஜ் சிங் செய்த செயலுக்கு ஒரு அறிவுரை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய மக்கள் முதுகில் குத்த மாட்டார்கள்.. இந்தியா மீது எனக்கு அளவு கடந்த பாசம் உள்ளது – கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி
யுவராஜ் சிங்கிற்க்கு சச்சின் கூறியது ” நீ அடித்து உடைத்த பேட் தான் உனக்கு வெகுகாலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அதற்கு மரியாதை கொடு, இனிமேல் இப்படி ஒருபோதும் செய்யாதே என்று எனக்கு அறிவுரை கூறினார். அன்றிலிருந்து நான் அது போன்ற விஷயத்தை ஒரு நாளும் செய்ததில்லை” என்று யுவராஜ் சிங் பழைய வீடியோ ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

