ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக பயிற்சியாளராக பணியாற்றி வரும் கெவின் பீட்டர்சன் இந்திய மக்கள் எப்போதும் முதுகில் குத்த மாட்டார்கள் என்று கூறி அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து வீரர்கள் எப்போதுமே இந்தியாவுக்கு வரும்போது ஏதேனும் குறைகள் சொல்லும் நிலையில் கெவின் பீட்டர்சன் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “‘நான் எதற்காக இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கிறேன் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் கடந்த 20 வருடங்களில் பலமுறை இந்தியாவிற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் கூட அவமரியாதை, முதுகில் குத்துதல், அவதூறு அல்லது மோசமான நிலை என்று நான் எதையும் சந்தித்ததில்லை. ஒவ்வொரு முறையும் மரியாதை, அன்பு, கருணை மட்டுமே கிடைத்திருக்கிறது.
இதையும் படிங்க:கோலி ரோஹித் இதை யோசிச்சு தான் வெளிய போனாங்க.. கம்பீர் மேலதான் முழு தப்பு.. மனோஜ் திவாரி
மேலும் இந்தியாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இப்போது எனக்கு சகோதரர்களாக மாறிவிட்டார்கள். மரியாதை என்பது கொடுத்து பெறுவது என்பதை நான் அறிவேன். அதை நான் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் விளையாடும் அவர்களுக்கு எதிராக விளையாடும் செய்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

