கோலி ரோஹித் இதை யோசிச்சு தான் வெளிய போனாங்க.. கம்பீர் மேலதான் முழு தப்பு.. மனோஜ் திவாரி

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் ஓரம் கட்டப்பட்டு இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வந்த முழுமையான மாற்றம் குறித்து எனக்கு துளியும் விருப்பம் கிடையாது. தற்போது இந்திய அணியில் அதற்கான தேவையும் அவசியமும் கிடையாது. நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு வேண்டுமானால் இந்த மாற்றம் தேவைப்படலாம். ஆனால் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் புனிதத்தைக் காப்பாற்ற நினைத்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இதன் காரணமாக விலகிக் கொண்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:கம்பீர் பதவியை ராஜினாமா செய்றக்கு பதிலா.. இந்த விஷயத்தை மட்டும் செய்ங்க.. இந்திய அணி தானா ஜெயிக்கும்.. கங்குலி வேண்டுகோள்

- Advertisement -

போட்டியில் தோல்வியடைந்த பிறகு கம்பீர் வீரர்களை குறை சொல்வது கூடாது. ஒரு பயிற்சியாளராக உங்கள் வேலை குறை சொல்வது அல்ல. இந்திய வீரர்களுக்கு சரியான தற்காப்பு ஆட்டம் இல்லை என்று தெரிந்தால் போட்டிக்கு முன்னதாக நீங்கள் கற்பித்திருக்க வேண்டும். எனவே கம்பீர்தான் அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles