கம்பீர் பதவியை ராஜினாமா செய்றக்கு பதிலா.. இந்த விஷயத்தை மட்டும் செய்ங்க.. இந்திய அணி தானா ஜெயிக்கும்.. கங்குலி வேண்டுகோள்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் கொல்கத்தா ஆடுகளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தான் கேட்டதாக கௌதம் கம்பீர் கூற, அதற்கு கோபம் அடைந்த இந்திய ரசிகர்கள் கம்பீர் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சம்பவம் குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி “பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தாலும் நான் கொல்கத்தாவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டதில் ஈடுபடவில்லை. பிசிசிஐ க்யூரேட்டர்கள் 4 நாட்களுக்கு முன்பாகவே ஆடுகளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். எங்கள் க்யூரேட்டர் முகர்ஜி இந்திய அணி கேட்ட ஆடுகளத்தை கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:மரண அடி.. 17 போர்.. 6 சிக்ஸ்.. தமிழக அணியை கதறவிட்ட ரிங்கு சிங்.. ரஞ்சி தொடரில் செய்த மாஸ் சம்பவம்

- Advertisement -

கொல்கத்தா ஆடுகளம் மூன்று நாட்களும் நிரம்பி இருந்தால் நீங்கள் இன்னும் நல்ல பிட்ச்சில் விளையாட தகுதியானவர்கள் ஆவிர்கள். சில நேரங்களில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கோரிக்கைக்கு ஏற்ப நாங்கள் ஆடுகளத்தை அமைக்கிறோம். தற்சமயம் கௌதம் கம்பீர் பதவி நீக்கம் செய்வதில் எந்த கேள்வியும் இல்லை. ஏனென்றால் கில் மற்றும் அவர்தான் இங்கிலாந்து டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார்கள். எனவே இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பலாம்” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles