நடப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று அமெரிக்க அணியை நியூயார்க் ஆடுகளத்தில் எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இந்திய அணி வீரர் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரைட்டில் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார். இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலி தனது புதிய பேட்டிங் ஸ்டைலை பின்பற்றக் கூடாது என்று கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் விளையாடிய விராட் கோலி 15 ஆட்டங்களில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை இந்த ஆண்டு வென்றார். மேலும் இந்த ஆண்டு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 155 ஸ்ட்ரைக் ரேட்டில் மிகவும் சிறப்பாக விளையாடினார். கடந்த இரண்டு வருடங்களாகவே விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து அதிகமான விமர்சனங்கள் இருந்தது.
இதனால் டி20 கிரிக்கெட்ருக்கு தகுந்தவாறு விராட் கோலி தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி அமைத்து தொடக்க ஆட்டக்காரராக பெங்களூர் அணிக்கு சிறப்பாக விளையாடினார். தற்போது அதே பாணியை டி20 உலக கோப்பைக்கு எடுத்து வந்து இரண்டு போட்டியிலும் அதிரடியாக விளையாடப் போய் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
இதனால் விராட் கோலி ஐபிஎல்லில் தொடர்ந்த அதே பேட்டிங் ஸ்டைலை பின்பற்றக் கூடாது எனவும், பழையபடி நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடும் விராட் கோலி வேண்டும் எனவும் சஞ்சய் கூறி இருக்கிறார். இது குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் விரிவாக கூறும் பொழுது
“கடந்த இரண்டு வருடங்களாக விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து அதிகம் பேசப்பட்டதால் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
மற்ற ஆட்டக்காரர்கள் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும்போது விராட் கோலி தன்னை 150 ஸ்ட்ரைக் ரைட்டிற்கு உயர்த்திக்கொண்டு ஐபிஎல்லில் மிகவும் சிறப்பாக விளையாடினார். ஐபிஎல்லில் விளையாடிய அதே பாணியை தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் இங்குள்ள ஆடுகளத்தின் தன்மையை பார்க்கும்போது இதற்கு பழைய விராட் கோலிதான் சரியாக இருப்பார்.
இதையும் படிங்க:இந்திய அணியில் செய்ய வேண்டிய முக்கிய இரு மாற்றங்கள்.. அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்.. முழு விபரம்
இதனால் விராட் கோலி தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி அமைத்து பழைய விராட் கோலியாக திரும்ப வர வேண்டும். ஆடுகளம் எப்போது நன்றாக பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கிறதோ அப்போது விராட் கோலி தனது புதிய பேட்டிங் ஸ்டைலை பின் தொடரலாம். எனவே அதுவரை பழைய விராட் கோலி ஆகவே திரும்ப வேண்டியது இந்திய அணிக்கு மிகவும் அவசியமானதாகும்” என்று கூறி இருக்கிறார்.

