இந்திய அணியில் செய்ய வேண்டிய முக்கிய இரு மாற்றங்கள்.. அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்.. முழு விபரம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இன்று இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

இரண்டு அணிகளுமே தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற இரண்டு அணிகளுமே நிச்சயமாக போட்டி போடும். முக்கியமாக இந்திய அணி பேட்டிங்கில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சொதப்பியது. இதனால் இந்த இரு மாற்றங்களை இந்திய அணி நிச்சயமாக செய்தாக வேண்டும்.

- Advertisement -

டி20 உலக கோப்பையில் வலிமையாக கருதப்பட்ட இந்திய அணி அதற்கேற்றவாறு தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. குறிப்பாக இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ஆனால் பேட்டிங் மட்டும் இன்னும் சரியாக கிளிக் ஆகவில்லை.

- Advertisement -

ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் இன்னும் சரியாக செயல்பட முடியாமல் தடுமாறி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக இரண்டு ஆட்டங்களில் களமிறங்கி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். மேலும் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபேவும் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதனால் இந்திய அணி இந்த இரு மாற்றங்களை செய்ய வேண்டியது கட்டாயம்.

முதலாவதாக இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி வழக்கம்போல மூன்றாவது இடத்திலேயே களமிறங்கி விளையாட வேண்டியது இந்திய அணிக்கு நல்லது. ஏனெனில் டி20 கிரிக்கெட் பொருத்தவரை விராட் கோலி மூன்றாவது இடத்தில் 30 முறை களமிறங்கி அதில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி இருக்கிறார். மேலும் லீக் சுற்றுக்குப் பிறகு சூப்பர் 8 சுற்றில் வலிமையான அணிகளுடன் இந்திய அணி மோத உள்ளதால் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம்.

- Advertisement -

இரண்டாவதாக சிவம் துபேவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பயிற்சி போட்டியில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சனை திரும்பவும் களம் இறக்கலாம். அவருக்கு இந்திய அணியில் விளையாடிய அனுபவமும் ஏற்கனவே இருப்பதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்பாக அவரும் ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ள கால அவகாசம் சரியாக இருக்கும். இதனால் சஞ்சு சாம்சனையும், தொடக்க வரிசையில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கினால் சிறப்பானதாக இருக்கும்.

இதையும் படிங்க:இந்தியாவின் உதவி பாகிஸ்தானுக்கு தேவை.. இன்றைய போட்டியில் காத்திருக்கும் முடிவு.. உதவி செய்யுமா இந்தியா?

அமெரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா( கேப்டன்), ரிஷப் பண்ட், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் பும்ரா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles