டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்க அணியை நியூயாயர்க் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அது தற்போது இந்திய அணியின் கைகளிலேயே உள்ளது.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடும்.
அடுத்த இடத்தில் உள்ள அமெரிக்க அணியும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்கா அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தினால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விடும். அப்போது பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறும் அபாயமும் இருக்கிறது.
பாகிஸ்தான் அணி இன்றைய கனடா அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் இலக்கை 18 வது ஓவரில் தான் வென்றது. இதனால் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட்டும் தற்போது குறைவாகவே காணப்படும். பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் அது தற்போது நடக்கின்ற இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளின் கைகளில் மட்டுமே இருக்கிறது.
அது எவ்வாறு என்றால் இந்திய அணி அமெரிக்க அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தால் அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே அமெரிக்க அணியின் நெட் ரன் ரேட் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அதற்கு அடுத்த போட்டியில் அமெரிக்க அணி கனடா அணியிடம் தோல்வி அடைய வேண்டும்.
பாகிஸ்தான் அணியும் தனது கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெறும். அதன் பிறகு நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதையும் படிங்க:சும்மா இருக்க மாட்டீங்களா யுவி?. இப்ப பாத்திங்களா என்ன ஆச்சுன்னு.. யுவராஜிடம் வருத்தம் அடைந்த அப்ரிடி
அவ்வாறு நடக்காமல் அமெரிக்க அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து தனது அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். எனவே பாகிஸ்தான் அணிக்கு மேற்கூறிய அனைத்தும் சாதகமாக நடந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று தவறினால் கூட பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறிவிடும்.

