ரோகித்துக்கு செம்ம வாய்ப்பு கிடைச்சிருக்கு.. அதை யூஸ் பண்ணலன்னா அவர் வெளிய போறது உறுதி – மஞ்சுரேக்கர் கணிப்பு

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றும் இரண்டு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி பத்து ஆட்டங்களில் 7 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா தான் எதிர்கொண்ட 7வது மெதுவான பந்தில் லென்த் சரியாக கணிக்க முடியாமல் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். இதன் மூலமாக அவர் அழுத்தத்தில் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் காயம் அடைந்த விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கி சிறப்பாக விளையாடினார். மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் அவரது இடத்தில் களம் இறங்க ஜெய்ஸ்வால் தயாராக இருக்கிறார். ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க முடியும். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா நிச்சயமாக அவர் ஆட்டம் இழந்த முறையில் ஏமாற்றம் அடைந்து இருப்பார். அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவர் 50 ஓவர் கிரிக்கெட்டில் தடுமாறினால் அவர் பிரச்சனையில் இருக்கிறார் என்பதை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் பார்மில் இல்லாத ஒரு பேட்ஸ்மேன் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதற்கு ஒரு நாள் கிரிக்கெட் தான் மிகச் சிறந்த வடிவம்.

- Advertisement -

இதையும் படிங்க:இந்த ஒரு விஷயத்தில் எங்களுக்கு அழுத்தம் என்பது உண்மைதான்.. ஆனால் மக்கள் இதை மட்டும் மறக்கவே மாட்டார்கள்.. ரிஷப் பண்ட் பேட்டி

எனவே ரோஹித் சர்மா தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் போட்டிகளை பயன்படுத்திக்கொண்டு பார்முக்கு திரும்பாவிட்டால் இது போன்ற ஈஸியான போட்டிகள் அவருக்கு கிடைக்காது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்ததாக வருவதால் அவர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles