இந்திய டி20 அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது வலம் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த சூழ்நிலையில் வருண் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் இரண்டாவது முறையாக இடம் பிடித்திருக்கும் சுழற் பந்துவீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மொத்தமாக 16 ஆட்டங்கள் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய உலகின் முதல் பவுலர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இருப்பினும் இந்திய அணி அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் வருண் தற்போது இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக மாறி இருக்கிறார். பந்துவீச்சில் அவரது முக்கியத்துவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி அடுத்த முறை டி20 உலக கோப்பையை வெல்வதற்கும் இவர் முக்கிய பங்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் வருண் சக்கரவர்த்தி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” வருண் சக்கரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சு டி20 கிரிக்கெட்டில் அடிக்கடி நிகழக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அவர் பேட்ஸ்மேன்களுக்கு பந்தை மேல் நோக்கி வீசுவதற்கு பயப்படுவதில்லை. குறிப்பாக நேற்றைய போட்டியிலும் அவர் இதை செய்திருக்கிறார். ஜெமி ஸ்மித் அவரது பந்தில் சிக்சர் அடித்தாலும் அதற்கு அடுத்த பந்தை தைரியமாக ஷார்ட் ஆக மாற்றி வீசினார்.
இதையும் படிங்க:ஏன் அவர் அப்படி செய்தார்.. இந்திய அணியின் தோல்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.. அம்பத்தி ராயுடு விமர்சனம்
அவர் பேட்ஸ்மேன்கள் தன்னை நோக்கி வரும் வகையில் சவால் அளிக்கக்கூடிய வீரராக இருக்கிறார். பொதுவாக தைரியசாலிகளுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் இருக்கும் என்று கூறும் பழமொழி உண்டு. இதுபோல வருண் சக்கரவர்த்தி ரிஸ்க் எடுப்பதற்கு எப்போதுமே தயாராக இருக்கக்கூடிய வீரராக இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக இருக்கிறார். இதனால் பேட்ஸ்மேன்கள் அவரிடம் இருந்து தப்பிப்பது கடினமாகி விடுகிறது” என்று கூறி இருக்கிறார். இன்னும் இரண்டு போட்டிகள் இந்திய அணிக்கு இருக்கும் நிலையில் இதிலும் வருண் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

