இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தற்போது 2-1 எந்த கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்திய அணி 172 ரன்கள் என்ற இலக்கை ஆட வந்தது. இந்திய அணியின் முதல் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க. சஞ்சு சங்சன் 3, அபிஷேக் சர்மா 24, சூர்யகுமார் யாதவ் 14, திலக் வர்மா 18 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தரும் ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்துக் கொண்டிருக்க, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 15 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேற. துருவ் ஜுரல் எட்டாம் வரிசையில் தான் களமிறங்கினார்.
கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டது. எனவே ஹர்திக் பாண்டியா மற்றும் துருவ் ஜுரல் எடுக்கும் ஒவ்வொரு ரன்களும் முக்கியம் என்ற கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இதில், ஹர்திக் பாண்டியா தானே இந்த போட்டியை முடித்து விடுவேன் என்று எண்ணத்தால் 18 ஓவரில் ஒரு ரன்னை ஓட மறுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 19-வது ஓவரின் முதல் பந்திலேயை ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதன் பின்பு இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியே சந்தித்தது.
ஹர்திக் பாண்டியாவின் இந்த செயலை அனைவரும் விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னாள் நட்சத்திர பேட்டரான அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்டியா இந்த தோல்விக்கு பதில் சொல்லியாக வேண்டும் என விமர்சித்துள்ளார்.
இந்த முடிவு தேவையற்றது:
அம்பதி ராயுடு, “ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னை எப்படி மறுக்கலாம்? துருவ் ஜுரல் ஒரு அறியப்பட்ட பேட்ஸ்மேன், அவராலும் பவுண்டரிகள் அடிக்க முடியும். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹார்திக் அவுட் ஆனதை நினைத்தால், ஹர்திக் பாண்டியாவின் இந்த முடிவு தேவையில்லை. அவர் துருவ் ஜுரலை நம்பியிருக்கலாம்.
துருவ் ஜுரல் எண் 8-ல் அனுப்பப்பட்டாலும், அவர் முன்னாடி நல்ல ஷாட்கள் விளாச முடியும் என்று நிரூபித்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல் நல்லதல்ல, ஹார்திக் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

