மைக் ஹசியின் ஜெராக்ஸ்.. சாய் சுதர்சனை 10 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது.. பாராட்டும் ஆஸ்திரேலியா ஜாம்பவான்

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் சர்வதேச ஜாம்பவான்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 15 இன்னிங்ஸ்களில் விளையாடிய சாய் சுதர்சன் 7 அரைசங்கள், ஒரு சதம் உட்பட 759 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். இதனால் அதிக ரன்கள், எமர்ஜிங் வீரர், அதிக பவுண்டரி, ஃபேண்டசி கிங் உள்ளிட்ட 4 விருதுகளை சாய் சுதர்சன் கைப்பற்றினார்.

- Advertisement -

மைக் ஹசி ஜெராக்ஸ்

தற்போது இங்கிலாந்து பயணிக்க உள்ள இந்திய அணியில் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிச்சயம் டாப் ஆர்டரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய் சுதர்சன் குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக் ஹசி கூறும் போது, இந்திய அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேனாக இருக்க போகிறார்.

- Advertisement -

அவரால் 3 வகையான போட்டிகளிலும் ரன்களை குவிக்க முடியும். அதனை ஐபிஎல் தொடரிலேயே நிரூபித்துவிட்டார். அவர் கொஞ்சம் ஸ்பெஷல் வீரராக தெரிகிறார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து டாம் மூடி கூறும் போது, சாய் சுதர்சனின் ஆட்டம் எனக்கு மைக் ஹசியின் நினைவுப்படுத்தி உள்ளது. அவர் கிரீஸில் நிற்கும் ஸ்டைல், அவரின் ஆட்டம் அப்படியே பொருந்தி போகிறது.

- Advertisement -

நம்பர் 3ல் சாய் சுதர்சன்?

அதேபோல் ஒவ்வொரு விக்கெட்டுக்கு இடையிலும் அவரின் ஆட்டம் மெருகேறி கொண்டே போவது, என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு, 2 ரன்களை அதிகமாக எடுப்பது எல்லாம் அப்படியே மைக் ஹசியுடன் ஆட்டத்துடன் ஒத்துப் போகிறது. ஒருவேளை கிரிக்கெட் வாழ்க்கையும் அப்படி அமைந்தாலும், சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப சாய் சுதர்சன் பயிற்சி போட்டிகளிலும் நம்பர் 3ல் களமிறங்குவார் என்றும், அதற்காக இன்று இரவு சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் லண்டன் செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles