நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 83 ரன்கள் குவித்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை விளையாடி வரும் நிலையில் பேட்டிங்கை எப்படி அமைத்துக் கொள்கிறார் என்பது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறது. மேலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐந்து போட்டிகளில் அவர் விளையாடியுள்ள நிலையில் இதுவரை 273 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவரின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் லக்னோ அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரான் 288 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் இருக்கும் நிலையில், தொடர்ந்து சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினால் இவர் ஆரஞ்சு தொப்பியை வாங்குவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரை சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்ததாக மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தனது பேட்டிங் குறித்து சாய் சுதர்சன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அணியில் இருந்து தகவல்கள் அனுப்பப்படுகின்றன. விளையாட்டில் நான் எதை மேம்படுத்த முடியும், சூழ்நிலைகளின் அடிப்படையில் நான் எதை சரியாக செய்ய முடியும், எந்த பந்துவீச்சாளரை நான் எதிர்கொண்டால் அதிக ரன்கள் எடுக்க முடியும் என்பது குறித்து எனக்கு ஆலோசனைகள் சரியாக வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் நான் சுதந்திரமாக விரும்பியதை செய்வதற்கும் அணி நிர்வாகம் நல்ல சுதந்திரம் தருகிறது.
இதையும் படிங்க:தோனியை விமர்சனம் செய்யும் முன் கொஞ்சம் இந்த விஷயத்தை யோசிச்சு பாருங்க.. அவரின் அருமை நல்லா புரியும் – சிஎஸ்கே முன்னாள் வீரர்
வெளிப்படையாகவே நீங்கள் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினால் இந்திய அணியில் உங்களுக்கான கதவு நிச்சயம் திறக்கப்படும். ஆனால் தற்போது நான் ஐபிஎல் தொடரில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் செயல்பட்டு வருகிறேன். தற்போது இதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். நான் நன்றாக விளையாடி குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஒரே எண்ணம். மேலும் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் உங்களுக்கான கதவு தானாக திறக்கப்படும்” என்று பேசி இருக்கிறார்.

