நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் சிஎஸ்கே 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் எம்எஸ் தோனி இறுதியில் ஓரளவு அதிரடியாக விளையாடினார்.
இந்த சூழ்நிலையில் தோனியின் மீது விமர்சனங்கள் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரரான மொயின் அலி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனியின் பேட்டிங் சிஎஸ்கே ரசிகர்களை ரொம்பவே சோதித்தது. மேலும் சிஎஸ்கே அணியில் ஜடேஜா மற்றும் நூர் அகமது தேவை மட்டுமே இருக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 10 கோடி ரூபாய் வரை செலவு செய்தது அந்த அணிக்கு நல்ல பேட்ஸ்மேன்களை வாங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயத்த 219 ரன்கள் இலக்கை இறுதிக்கட்டத்தில் எம்.எஸ். தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து சென்னை அணி 200 ரன்களைக் கடக்க உதவினார். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடிய முன்னாள் வீரர் மொயின் அலி தோனி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இப்போது தோனியை விட யாராவது ஐபிஎல் தொடரில் சிறந்த விக்கெட் கீப்பர் இருக்கிறார்களா? இப்போது கூட எம்எஸ் தோனி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். தோனியை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். நான் சிஎஸ்கே அணியில் விளையாடிய போது கூட தோனியே மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். இப்போது சிஎஸ்கே நன்றாக செயல்படாத போது தோனியின் இடத்தில் வேறு யாராவது வர வேண்டும் என்கிறார்கள்.
இதையும் படிங்க:சிஎஸ்கே அணிக்கு 4வது தோல்வி.. தோனி காட்டிய இன்டென்ட்.. பஞ்சாப் அபார வெற்றி
ஒரு அணி நன்றாக விளையாடாத போது இப்படிப்பட்ட விமர்சனங்கள் வரும். நாம் தொடர்ந்து விளையாட வேண்டுமா என்பது சுயநலமான ஒன்றாக இருக்கக் கூடாது. நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் எதார்த்தங்களின் அடிப்படையில் நியாயமானதாக இருக்க வேண்டும் அதுவே முக்கியமான விஷயமாகும். அணிக்கு நம்மால் அதிகமாக கொடுக்க முடிந்தால் நாம் தொடர்ந்து விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அணி புதிய திசையில் செல்ல விரும்பும் போது நாம் அதற்கு முழுவதும் அனுமதி கொடுக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

