சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளமிங் நீக்கப்பட வேண்டும் என சடகோபன் ரமேஷ் விமர்சனம் செய்திருக்கிறார்.
வெளிநாட்டு டி20 தொடர்களில் ஸ்டீபன் பிளம்மிங் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரையில் எந்த பட்டத்தையும் வென்றது கிடையாது. தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே ஐபிஎல் தொடரில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார்.
இதுகுறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது ” தோனி ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த காரணத்தினால்தான் பயிற்சியாளராக பிளமிங் கோப்பைகளை வென்று இருக்கிறார். வேறு எந்த தொடரிலும் அவர் கேப்டனாக கோப்பைகளை வெல்லவில்லை. இதன் மூலம் தோனியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்”
“இத்துடன் தற்போது கிரிக்கெட் நிறைய மாறிவிட்டது. எனவே இதற்கு வீரர்கள் தகுதியாக இருக்கிறார்களா என்று பார்ப்பது போல பயிற்சியாளர்களையும் பார்க்க வேண்டும். இந்த வகையில் பிளம்மிங் மிகவும் பின்தங்கி இருக்கிறார். எனவே அவர் நீக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

