சூரியவன்சி மெச்சூரிட்டிய பார்த்து பிரமிச்சு போயிட்டேன்.. அகமதாபாத்தில் அந்த சம்பவம் நடந்துச்சு – ரியான் பராக் பேச்சு

தற்போது ஐபிஎல் தொடரில் 15 வயதான ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூரியவன்சி மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பேட்டிங் குறித்து கேப்டன் ரியான் பராக் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 11 ஓவர்களாக நடைபெற்ற போட்டியில் வைபவ் சூரியவன்சி வெறும் 14 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் எடுத்தார். இதில் பும்ரா ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 15 வயதில் அவரது திறமை குறித்து பலரும் வியந்து வருகிறார்கள். நேற்று பும்ராவை அவர் எதிர்கொண்டு ஆடிய விதத்தை பார்த்த பிறகு அவருக்கு சிறப்பு திறமை இருப்பதாக அனைவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இது குறித்து ரியான் பராக் பேசும் பொழுது “வைபவ் சூர்யவன்சி வெறுமனே பந்தை அடிக்கக் கூடியவர் கிடையாது. எல்லா தந்தையும் அடிக்க வேண்டும் என்று நினைப்பவரும் கிடையாது. குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத் போட்டியில் அந்த கண்டிஷனுக்கு ஏற்றபடிதான் அவர் ஆடினார். அவருடைய வயதுக்கு அவருக்கு இருக்கும் முதிர்ச்சியை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர் சிறப்பு திறமை வாய்ந்த வீரர்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles