நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி செய்த சம்பவம் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இலக்கை துரத்திய சென்னை அணி 18 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
முதலில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதமாக காணப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். அதற்குத் தகுந்தவாறு சென்னை அணியின் பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்துவீசி கொல்கத்தா அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினர். ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை துரத்திய சென்னை அணியில் கெய்க்வாட் சிறப்பாக விளையாட, மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய டாரி மிச்சல் சிறப்பாக விளையாடி 25 ரன்கள் குவித்த நிலையில் சுனில் நரேனின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்ததாக சிவம் தூபே களம் இறங்கி 18 பந்துகளில் மூன்று சிக்சர்களை விளாசி 28 ரன்கள் குவித்து வெளியேற, அதன் பிறகு களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி 19 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 16.6 வது பந்தை பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகேந்திர சிங் தோனியோ அந்த பந்தை டாட் வைத்து அடுத்த ஓவரில் ருத்ராஜ் ஆட்டத்தினை முடிக்குமாறு வழி வகுத்தார்.
இருப்பினும் பதினெட்டாவது ஓவரின் முதல் பந்தை சிங்கிள் அடித்த ருத்ராஜ் இரண்டு ரன்கள் தேவைப்பட்டணையில் மகேந்திர சிங் தோனியும் சிங்கிள் அடிக்க, அதன் பிறகு அடுத்த பந்து ருத்ராஜ் பவுன்டரி அடித்து வெற்றிகரமாக ஆட்டத்தினை முடித்தார். சிக்சரோ அல்லது பவுண்டரியோ அடித்து ஆட்டத்தை தோனி முடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், அவர் சிங்கிள் ரன்னை மட்டுமே எடுத்து ஸ்ட்ரைக்கை திரும்பவும் ருத்ராட்சம் ஒப்படைத்தது ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியாக அமைந்தது.
இதையும் படிங்க:ஜெயிச்சா பாராட்டுவாங்க.. ஆனா தோத்தா குடும்பம் வரைக்கும் இழுப்பாங்க.. ஆர்சிபி ஃபேன்ஸ் குறித்து தினேஷ் கார்த்திக்
ஒரு பக்கம் ரசிகர்களுக்கு அதிருப்தியாக அமைந்தாலும், தோனி இந்த சீசனோடு கிட்டத்தட்ட விடை பெற்று விடுவார் என்றே தெரிவதால் இனி அனைத்துமே ருத்ராஜிடம் ஒப்படைத்து விட்டது போலவே பேசாமல் புரிய வைத்து விட்டு சென்றிருக்கிறார் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும் மகேந்திர சிங் தோனி இந்த சீசனோடு விடைபெறுவது சென்னை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்கள் அனைவருக்குமே ஒரு பேரிழப்பு தான்.

