ஜெயிச்சா பாராட்டுவாங்க.. ஆனா தோத்தா குடும்பம் வரைக்கும் இழுப்பாங்க.. ஆர்சிபி ஃபேன்ஸ் குறித்து தினேஷ் கார்த்திக்

இந்த ஐபிஎல் தொடரில் வலுவான அணியாகக் கருதப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தற்போது 5 போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

அந்த அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரரும், இந்திய கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் இந்த தொடரோடு கிரிக்கெட்டை விட்டே ஓய்வு பெறுவதாக வித்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை இவரது வாழ்க்கை டெல்லி அணிக்காக ஆரம்பித்தது. 2008ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட இவர் அதற்குப் பிறகு மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா என மூன்று அணிகளில் விளையாடிவிட்டு திரும்பவும் தற்போது ஆர்சிபி அணிக்கு வந்து விளையாடுகிறார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக்கிற்கு ஐபிஎல் நல்ல ஆண்டாக அமைந்தது என்றும் சொல்லலாம். சிறப்பாக விளையாடிய அவர் இறுதி கட்டத்தில் பெங்களூர அணியை முக்கியமான கட்டத்தில் வெற்றி பெற வைத்தார். அதன் மூலமாகவே இவருக்கு இந்திய டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது. 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.

- Advertisement -

2022ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடியும் ஒரு கோப்பையை கூட வாங்காத அணி. ஆனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தங்கள் அணிக்கு எப்போதுமே ஆதரவினை கொடுக்க தயங்கியதில்லை. ஜெயித்தாலும் தோற்றாலும் ஒரே மனநிலையோடு தங்களது ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டியில் பேசும்பொழுது
“ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உண்மையாகவே விசுவாசமான ரசிகர்கள்.அவர்கள் ஒரு குடும்பம் போல, அவர்களை நல்லது கெட்டது என்று இரண்டு வழிகளில் நான் பார்க்கிறேன். எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் நான் களத்திற்கு உள்ளே விளையாட செல்லும் போது என்னை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அவர்களது கொண்டாட்டம் என்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேன் போல உணர வைக்கும்.

- Advertisement -

ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடினால் என்னை கொண்டாடுவார்கள். ஆனால் அதுவே நான் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை திட்டுவதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தையும் சேர்த்து இழுப்பார்கள். ஆனால் அதே சமயத்தில் எந்த ஒரு வீரரையும் ஆர்சி ரசிகர்கள் வெளியே விட்டுக் கொடுத்த பேச மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இது சிஎஸ்கே கோட்டை.. என்ன பண்ணனும்னு அங்களுக்கு தெரியும்.. இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான்.. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஆனால் ஆர்சிபி அணியோ ரசிகர்களை ஏமாற்றும் வகையில் இதுவரை விளையாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதுதான் உண்மை. இதுவரை தோல்வி பாதையில் மட்டுமே சென்று கொண்டிருக்கும் ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles