சிஎஸ்கேவை காப்பி அடித்த ஆர்சிபி.. புது கேப்டன் அறிவிப்பு.. கோலியை எடுக்காத காரணம் என்ன.?. வெளியான முழு தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஆர்சிபி அணி தற்போது தங்களது புதிய கேப்டனை அறிவித்திருக்கிறது. ஆர்சிபி செய்த செயல் சிஎஸ்கேவை காப்பி அடித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

விராட் கோலிக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாப் டூ பிளஸ்சிஸ் இந்த வருடம் நடைபெற்ற மெகா ஏலத்தில் பெங்களூர் அணி அவரை வாங்கவில்லை. பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுக்காததால் டெல்லி அணி அவரை வாங்கிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களாக விராட் கோலி ஏற்கனவே இருந்த நிலையில் அதற்குப் பிறகு நல்ல வீரர்களை வாங்கி ஆர்சிபி அணி வலுவாக கட்டமைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டனாக சீனியர் அடிப்படையில் விராட் கோலி மட்டுமே இருந்தார். இருப்பினும் புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா போன்ற வீரர்கள் இருந்தாலும் பெங்களூர் அணி அதனை கருத்தில் கொள்ளவில்லை. விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இல்லாத நிலையில் மீண்டும் அவர் ஆர்சிபி அணியின் கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் பெங்களூர் அணி இளம் வீரர் ரஜத் பட்டிதாரை புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு பணிச்சுமையை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி டிராஃபியில் டெல்லி அணிக்காக களமிறங்கி விளையாடினார். இருப்பினும் அப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவியை மறுத்தார். இதனால் விராட் கோலி கேப்டன் பதவியை விரும்பவில்லை என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:போங்கடா நீங்களும் உங்க பேட்டிங்கும்.. எனக்கு தூக்கம் வருது.. மைதானத்திலேயே உறங்கிய ஆர்ச்சர்

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக அறிவித்த நிலையில் அதனை ஆர்சிபி நிர்வாகம் காப்பி அடித்து இளம் வீரரை கேப்டனாக நியமித்திருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே இனி மார்ச் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி புதிய கேப்டன் உடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles