போங்கடா நீங்களும் உங்க பேட்டிங்கும்.. எனக்கு தூக்கம் வருது.. மைதானத்திலேயே உறங்கிய ஆர்ச்சர்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலின் அபார ஆட்டம் காரணமாக 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளரான ரஷீத் 4 விக்கெட்டுகளையும், மார்க் அவுட் 2 விக்கெட்டுகளையும், அட்கின்சன் மற்றும் ரூட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் –  சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக தொடங்கிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

தடுமாறும் இங்கிலாந்து

- Advertisement -

இதன்பின் அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் டக்கெட் 34 ரன்களிலும், சால்ட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த டாம் பேண்டன் 38 ரன்களிலும், ஜோ ரூட் 24 ரன்களிலும், பட்லர் 6 ரன்களிலும் ஹாரி ப்ரூக் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய அணியின் ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் இருவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பொளந்து கட்டி கொண்டு இருந்தனர். இதனால் இந்திய அணியின் வெற்றியும், இங்கிலாந்து அணியின் தோல்வியும் கிட்டத்தட்ட உறுதியானது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஆர்ச்சர் பெவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

- Advertisement -

தூங்கிய ஆர்ச்சர்

ஒரு கட்டத்தில் ஆட்டம் போர் அடிக்க, ஆர்ச்சர் ஒரு பக்கம் கம்பியில் தலையை வைத்து தூங்கி தொடங்கிவிட்டார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேமராமேனும் கேமராவை திருப்பிக் காட்ட, ரசிகர்களிடையே கரகோஷம் எழுந்தது. ஏனென்றால் சர்வதேச போட்டி நடக்கும் போதே, இங்கிலாந்து வீரர் மைதானத்தில் தூங்கி வழிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஆர்ச்சர் இதுபோன்ற சேட்டையை அடிக்கடி செய்யக் கூடியவர் தான். அதனால் சோசியல் மீடியாவில் சேட்டைக்காரர் ஆர்ச்சர் என்று ரசிகரகள் கிண்டல் செய்ய தொடங்கினர். அதேபோல் ஆர்ச்சரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இங்கிலாந்து அணி தோல்வியடையும் நிலையில் இருந்த போது கூட, ஆர்ச்சர் கண்டுகொள்ளவில்லை என்று கூறி வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles