விராட் கோலி மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுதா.? எல்லாருமே அதைத்தான் பண்றாங்க.. சஞ்சய் பங்கர் விளாசல்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இன்று கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

இந்த போட்டி முடிவடைந்த உடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டு அங்கு சூப்பர் 8 போட்டிகள் விளையாட உள்ளது. பந்துவீச்சில் மிகப் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்திய அணி பேட்டிங்கில் மற்றும் சற்று கவலைப்படக் கூடிய வகையில் உள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். மேலும் இவர் ஸ்டைக் ரேட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு முன்னர்தான் ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 150 ஸ்ட்ரைக் ரைட்டில் 700 க்கும் அதிகமான ரன்களை குவித்தார்.

- Advertisement -

ஐபிஎல்லில் இவரது அபாரமான செயல்பாட்டை பார்த்து கிரிக்கெட் வல்லுனர்கள் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதன் மூலமாகவே ரோகித் சர்மாவும் அந்த முடிவை எடுத்து விராட் கோலியைத் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார். இந்திய அணி வெற்றி பெற்றதால் இவை இன்னும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகாமல் உள்ளது.

இதனால் இன்று நடைபெற உள்ள கனடா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம்க்கு வர வேண்டியது மிகவும் கட்டாயம். இந்த சூழ்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இந்திய அணி நியூயார்க் மைதானத்தில் விளையாடும் போது விராட் கோலி பேட்டிங்கில் ரன்கள் குவிக்கவில்லை என்பது உண்மைதான்.

- Advertisement -

ஆனால் ஒரு சில வீரர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் ரன்கள் குவிக்கவில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலிக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கக் கூடாது. மேலும் நியூயார்க் ஆடுகளம் பேட்டிங்க்கு மிகவும் சவால் ஆனது. என்னைப் பொறுத்தவரை விராட் கோலியிடம் இருந்து மிகப்பெரிய இன்னிங்ஸ் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். டி20 உலக கோப்பை அழுத்தமான கட்டத்தில் செல்லும்போது விராட் கோலியிடம் இருந்து மிகப்பெரிய ரன்கள் வரும்.

இதையும் படிங்க:வீரர்களின் தேர்வு இப்படித்தான் இருக்க வேண்டும்.. யோ-யோ டெஸ்ட் வைத்து அல்ல.. கௌதம் கம்பீர் பேட்டி

ஏனென்றால் அழுத்தத்தில் விராட் கோலி மிகவும் சிறப்பாக செயல்பட கூடியவர். மேலும் அமெரிக்க அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவின் பேட்டிங் அபாரமானதாக இருந்தது. தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சூரியகுமார் யாதவ் பதட்டமே இல்லாமல் மிகச் சிறப்பாக விளையாடினார்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles