வீரர்களின் தேர்வு இப்படித்தான் இருக்க வேண்டும்.. யோ-யோ டெஸ்ட் வைத்து அல்ல.. கௌதம் கம்பீர் பேட்டி

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி நட்சத்திரமாக ஜொலித்த கௌதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இவர் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த பின்னர், இந்த ஆண்டு ஆலோசகராக கொல்கத்தா அணியை வழிநடத்தினார்.

- Advertisement -

இவரது சிறப்பான வழி நடத்துதலில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலக கோப்பையோடு முடிவுக்கு வருவதால் கம்பீரை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

- Advertisement -

இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது இருப்பினும் இதற்கான அறிவிப்பு விரைவில் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தான் மட்டும் அப்படி இல்லாமல் அணி வீரர்கள் அனைவரும் பிட்டாக இருக்க வேண்டும் என்றும் கவனத்தில் கொள்வார்.

அவர் கேப்டனான காலத்திற்குப் பிறகு யோயோ டெஸ்ட் முறை அதிக கவனம் பெற்றது. இதனால் இந்திய வீரர்களும் உடலை பாதுகாப்பதில் அதிக கவனம் கொண்டனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரப்போவது குறித்தும், யோ யோ டெஸ்ட் முறை குறித்தும் கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கௌதம் கம்பீர் இது குறித்து விரிவாக கூறும்பொழுது
“நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தால் அதைவிட பெரிய கவுரவம் எனக்கு எதுவும் இல்லை. நான் 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இருந்து அணியை வழி நடத்துவேன். மேலும் யோ-யோ டெஸ்ட் முறை குறித்து என்னிடம் இருக்கிறீர்கள். ஒரு விளையாட்டு வீரர் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் இந்த மூன்றிலும் சிறப்பானதாக இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:மொதல்ல நாட்டுக்காக ஏதாவது பண்ணுங்க.. அப்புறம் கோலி, பும்ரா கூட கம்பேர் பண்ணிக்கலாம்.. சல்மான் பட் விளாசல்

இதை மட்டுமே ஒரு வீரர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். யோ யோ டெஸ்ட் வைத்து அல்ல” என்று கூறி இருக்கிறார். எனவே இவர் பயிற்சியாளராக வந்த பின்னர், இந்திய அணியின் சூழல், இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, வீரர்களின் ஒழுக்கம் போன்றவை சிறப்பானதாக இருக்கும் என்றுகிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். யோ யோ டெஸ்ட் முறை குறித்த கௌதம் கம்பீரன் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles