மொதல்ல நாட்டுக்காக ஏதாவது பண்ணுங்க.. அப்புறம் கோலி, பும்ரா கூட கம்பேர் பண்ணிக்கலாம்.. சல்மான் பட் விளாசல்

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி அணிகளில் ஒன்றான பாகிஸ்தான் அணி இதுவரை சுமாரான பங்களிப்பையே வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி வீரர்களான பாபர் ஆஸம் மற்றும் அப்ரிடி ஆகியோர் பணம் கொடுத்து ஒரு தரப்பு ரசிகர்களை பும்ரா மற்றும் கோலியோடு ஒப்பிட வைத்ததாகக் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என்று அதிரடியான மாற்றங்களோடு களமிறங்கியது. ஆனால் இந்த மாற்றங்கள் டி20 உலக கோப்பையில் கை கொடுக்கவில்லை. களமிறங்கிய முதல் போட்டியிலேயே கத்துக்குட்டி அணியான அமெரிக்க அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. சின்ன அணியிடம் தோல்வியை சந்தித்தபோதே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

- Advertisement -

மேலும் அதற்கு அடுத்த போட்டியில் பரம எதிரியான இந்திய அணியிடம் அபாரமாக வீசி இந்தியாவை 119 ரன்கள் கட்டுப்படுத்தினாலும், இந்திய அணியினரின் அபாரமான பந்துவீச்சால் 113 ரன்கள் மட்டுமே குவித்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதற்கு அடுத்த கனடா அணிக்கு எதிரான போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய ரன்கள் இலக்கையும் கடைசியில் கொண்டு வந்து வெற்றி பெற்றது.

இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா? பெறாதா? என்ற சூழ்நிலையிலேயே தற்போது பாகிஸ்தான் அணி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அணியின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது பாகிஸ்தான் அணியினர் ஒரு சிலர் பணம் கொடுத்து தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சல்மான் பட் விரிவாக கூறும்பொழுது
“பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பந்துவீச்சாளர் அப்ரிடி தங்களை தாங்களே உயர்த்திக் கொள்கின்றனர். சில நேரங்களில் இந்த வீரர்களை பும்ரா மற்றும் கோலியோடு ஒப்பிடுகிறோம். நீங்கள் ஒரு சூழ்நிலையில் ஐசிசியின் சிறந்த தரவரிசையை தொட்டதால் பரவாயில்லை. ஆனால் தற்போது உள்ள நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் உங்களது சொந்த வழியில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட ஆஸ்திரேலியாவிற்கே வாய்ப்புகள் அதிகம்.. காரணம் கூறுகிறார் பிராட் ஹாக்

அல்லது அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அணியோடு நின்று இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பொருத்தவரை பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. முதலில் நீங்கள் பெரிய அணிக்கு எதிராக வெற்றிகளை பெற்றுக் கொடுங்கள், பெரிய தொடர்களை வெல்லுங்கள் அதற்குப் பிறகு வேண்டுமானால் இவையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்று சல்மான் பட் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles