கோப்பை வீட்டுக்கு வருது.. எல்லாரும் மறக்காம வந்துருங்க.. ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த ரோகித் சர்மா

டி20 உலக கோப்பையை வென்ற சந்தோஷத்தில் இருக்கும் இந்திய அணியினர் நாளை காலை இந்தியாவில் ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாட தயாராக இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பையோடு ரசிகர்களுடன் கொண்டாட விரும்புவதாக ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

- Advertisement -

2007ம் ஆண்டு தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு டி20 உலக கோப்பையை வெல்லாமல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தோல்விப்பாதையிலேயே பயணித்தது. அதற்கு ரோகித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி கொடுத்து, டி20 உலக கோப்பையையும் வென்றுள்ளது. தற்போது கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணியினர் பார்படாசில் ஏற்பட்ட புயல் காரணமாக தாய்நாடு திரும்பாமல் அங்கேயே சிக்கியுள்ளனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், தனி விமானம் வைத்து இந்திய வீரர்களை கூட்டி வர ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே பார்படாஸ் புறப்பட்ட இந்திய விமானம்,அங்கிருந்து வீரர்களோடு நாளை காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்து இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வந்தவுடன் இந்திய அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மும்பை கடற்கரையிலும், மேலும் வான்கடே கிரிக்கெட் மைதானத்திலும் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. கடற்கரையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக வர இந்திய அணியினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற மகேந்திர சிங் தோனிக்கு, கொடுக்கப்பட்ட வரவேற்பு போல தற்போது ரோகித் சர்மாவுக்கும் அதே மாதிரியான வரவேற்பு கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இது குறித்து ரோஹித் சர்மா விரிவாக கூறும்பொழுது “இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட நாங்கள் விரும்புகிறோம். இது இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

இதையும் படிங்க:ஐசிசி டி20 ரேங்கிங்.. மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா.. நம்பர் 1 இடத்திற்கு முன்னேற்றம்.. சில இந்திய வீரர்களும் உயர்வு

எனவே அனைவரும் இந்த வெற்றியை ஜூலை 4ம் தேதி மாலை 5 மணிக்கு மும்பை கடற்கரையில் கொண்டாடத் தயாராக இருங்கள். கோப்பை வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். அதுபோக இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பிலும், செயலாளர் ஜெயிஷா தரப்பிலும் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை முடித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles