ஸ்பின்னர்கள் அவசியம் தம்பிகளா.. அந்த 2 பேரும் இல்லனா இந்திய அணிக்கு ஆப்பு நிச்சயம்.. எச்சரிக்கும் முரளிதரன்

இன்னும் 9 நாட்களில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி மீண்டும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஃபார்ம் மட்டுமே ரசிகர்களின் கவலையாக இருந்தது.

- Advertisement -

ஏனென்றால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமென்றால், இந்த இரு பேட்ஸ்மேன்களின் ஃபார்ம் மிகவும் முக்கியமானது என்று பார்க்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பையை வெல்ல இவர்களின் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது.

- Advertisement -

ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மா

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா விளையாடுவது சந்தேகம் தான். இதனால் சீனியர் வீரர்கள் இருவரும் பொறுப்பை எடுத்து இந்திய அணியை கரை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியில் அபாரமாக சதம் விளாசி ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. இதுகுறித்து இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பேசும் போது, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். எப்போதும் சொல்வதை போல், ஃபார்ம் என்பதே தற்காலிகமானது. ஆனால் கிளாஸ் நிரந்தரமான ஒன்று.

- Advertisement -

2 வீரர்களும் முக்கியம்

அதனால் அவர்கள் இருவரும் நிச்சயம் ஃபார்முக்கு வருவார்கள். ரோஹித் சர்மா ஏற்கனவே ஃபார்முக்கு வந்துவிட்டார். விராட் கோலியும் விரைவில் ஃபார்முக்கு வந்துவிடுவார். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால், அவர்கள் இருவரும் ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல்  சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல ஸ்பின்னர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைக்கும். அப்படி பார்க்கும் போது, ஆசிய அணிகளான இந்தியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளில் சிறந்த ஸ்பின்னரக்ள் இருக்கின்றனர். அதிலும் இந்திய அணியில் 4 உலகத்தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதேபோல் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் சிறந்த பேட்ஸ்மேன்களாகவும் வலம் வருகிறார்கள்.

பாகிஸ்தானிலும் அப்படியான வீரர்கள் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ள மைதானங்களுக்கு ஏற்ப ஆசிய அணிகளில் நல்ல பேலன்ஸ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி இன்னும் முழு ஃபார்முக்கு வராதது ரசிகர்களிடையே கவலையடைய செய்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles