இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலியின் தலைமையில் 2019ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி அரைஇறுதி வரை முன்னேறியது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 2019ஆம் ஆண்டு உலக கோப்பையில் அம்பத்தி ராயுடு விளையாடாமல் போனதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் என்று கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்காத அம்பத்தி ராயுடு
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக வந்திருக்க வேண்டிய அம்பத்தி ராயுடு சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி தனது திறமையை வெகுவாகவே நிரூபித்து வந்தார். அந்த நிலையில் இந்திய அணிலும் இடம் பிடித்து மிடில் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ராயுடு அப்போது கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை அறிவிக்கப்பட்டபோது அதில் ராயுடுவின் பெயர் இடம் பெறவில்லை.
இது அப்போது தனக்கும், தேர்வு குழுவில் இருந்த எம்எஸ்கே பிரசாத் என்பவருக்கும் இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் அணியில் இருந்து தன்னை நீக்கி விட்டார் என்று ராயுடு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விராட் கோலிக்கு யாரைப் பிடிக்கவில்லையோ அல்லது யார் நல்லவர்களாக தெரியவில்லையோ அவரை உடனடியாக அணியிலிருந்து நீக்கி விடுவார் என்று கூறி பரபரப்பான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
விராட் கோலி செஞ்சது நியாயம் இல்லை
இது குறித்து உத்தப்பா கூறும் பொழுது “விராட் கோலிக்கு யாரை பிடிக்கவில்லையோ அல்லது யார் நல்லவர்களாக தெரியவில்லையோ அவர்கள் உடனே அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதற்கு நல்ல உதாரணம் தான் அம்பத்தி ராயுடு. இங்கு எல்லோருக்கும் ஒரு ஒரு கருத்து இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு வீரரின் திறமையை கூண்டுக்குள் அடைப்பது போல அடக்க கூடாது. உலக கோப்பையில் விளையாடுவதற்காக ராயுடு பெருமளவில் தயாராகி இருந்தார்.
இதையும் படிங்க:வெறும் 6 ரன்ஸ்.. சிஎஸ்கேவின் ஜோகன்னஸ்பர்க் அணி அபாரம்.. மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் தோல்வி.. தென் ஆப்பிரிக்க டி20 லீக்
அவரது உடைகள் மற்றும் கிட் பேக் போன்றவற்றை உலகக் கோப்பைக்கு விளையாடுவதற்காக தயார் செய்துவிட்டு மிக ரெடியாக இருந்தார். அவர் வீட்டில் இருந்தவர்கள் கூட அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று அனைவரும் நம்பினர். ஆனால் திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக அவரை அணியிலிருந்து நீக்கி விராட் கோலி செய்தது நியாயமான செயல் அல்ல” என்று உத்தப்பா கூறியிருக்கிறார்.

