ஜோகனஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி, MI கேப்டவுன் அணி தோல்வி.
தென்னாப்பிரிக்கா T20 தொடரான SA20 தொடர் நடைபெற்று வருகிறது இதன் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக பங்கேற்ற ஜோகனஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அங்கமாக பங்கேற்ற MI கேப்டவுன் அணியும் மோதியது. இதில் ஜே.எஸ்.கே அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
SA20 தொடர்
ஐபிஎல் போன்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் தொடர் தான் SA20 தொடர். இவற்றில் தினேஷ் கார்த்திக், பாஃப் டு பிலஸிஸ் போன்ற பல நட்சத்திர பங்கேற்று வருகிறார்கள். இந்த போட்டிகள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் சார்பாக தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடர் மூலம் பல இளைஞர்கள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணிக்கு இடம் பெறுகிறார்கள்.
இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிந்த நிலையில் நான்காவது ஆட்டம் ஜே.எஸ்,கே மற்றும் MI கேப்டவுன் அணிக்கு இடையே நடைபெற்றது.
ஜேஸ்கே அணி வெற்றி
நான்காவது போட்டியில் பாஃப் டு பிலஸிஸ் தலைமையிலான ஜே.எஸ்.கே அணியும் ராஷித் கான் தலைமையிலான MI அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த MI அணி 20 ஓவர்களுக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இவற்றில் லிண்டே 48 ரன்களும் டிலானோ 44 ரன்களும் எடுத்தனர் மற்றவர்கள் பெரிதாக சோபிக்க தவறினர்.
இதன் பின்பு 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜே.எஸ்.கே அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கான்வே 9 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் பாஃப் நிதானமாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார். ஜே.எஸ்.கே அணி 11.3 ஓவர்கள் முடிவில் 82/3 என்ற நிலையில் இருக்கும்பொழுது மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி தடைபட்டது. மீண்டும் போட்டி தொடங்க வாய்ப்பு இல்லாததால் D/L முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஜே.எஸ்.கே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

