டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மூன்றாம் வரிசையில் களம் இறங்கி தற்போது மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி அடுத்த போட்டியில் மோத உள்ள நிலையில், தனக்கும் சஞ்சு சாம்சனுக்கும் பிரச்சினை என ஊடகங்களில் வெளிவரும் செய்தி குறித்து ரிஷப் பண்ட் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட், மருத்துவமனையில் ஓய்வு பெற்ற பின்னர் மிகக் கடினமான உழைப்பிற்குப் பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்கினார். களமிறங்கியது மட்டுமல்லாமல் அணியை சிறப்பாக வழி நடத்தவும் செய்தார். இதனால் இவருக்கு வருகிற டி20 உலக கோப்பையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே டி20 உலக கோப்பையிலும் இடம் கிடைத்து இவரது பேட்டிங் வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி விளையாடிய ரிஷப் பண்ட் அப்போட்டியில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில் ரிட்டய்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி 26 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி வெற்றி பெற ஆறு ரன்கள் இருக்கும் நிலையில், கடைசியாக அவர் அடித்த சிக்சர் ரசிகர்களிடையே தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இவரோடு சேர்த்து விக்கெட் கீப்பராக ராஜஸ்தான் அணியில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு இதுவரை இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை.
இதனால் சஞ்சு சம்சனுக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இது குறித்து தற்போது மனம் திறந்து பேசி இருக்கும் ரிஷப் பண்ட்
“எனக்கும், சஞ்சு சம்சனுக்கும் இடையில் பிரச்சனை என்பது முற்றிலும் வதந்தி. அவர் பழக மிகவும் எளிமையான மனிதர். அவருடைய குணமே எப்போதும் அமைதியாக இருப்பது. எனவே இது போன்ற செய்திகள் முற்றிலும் வதந்தியாகும்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக.. இந்திய அணியின் தரமான பிளேயிங் லெவன்.. என்ன மாற்றம் இருக்கும்?
எங்களைப் பற்றி பேசும் விஷயங்களில் நாங்கள் பெரும்பாலும் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் ஒரே அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள். எங்கள் இருவருக்கிடையில் நல்ல நட்புணர்வு இருக்கிறது என்று இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் பேட்டிங் வரிசையை இந்திய அணி நீளப்படுத்த விரும்பினால் சஞ்சு சாம்சனை களம் இறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

