பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக.. இந்திய அணியின் தரமான பிளேயிங் லெவன்.. என்ன மாற்றம் இருக்கும்?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்தியாவை விட பாகிஸ்தான் அணிக்கு போட்டி மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியை கட்டாயமாக வென்றாக வேண்டும்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையேயும் மிக முக்கியமாக பார்க்கப்படுவதால் இந்திய அணியும் இந்த போட்டியை வெல்ல மிகத் தீவிரமாக இருக்கும். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி தனது முதல் போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கியது.

- Advertisement -

வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஸ்தீப் சிங், பும்ரா என்ற மூன்று தேகப்பந்துவீச்சாளர்களும் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரும் உள்ளனர். கடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களே மிகுந்த ஆதிக்கம் செலுத்தினர் என்பதால் சுழற்பந்து வீச்சுக்கு பெரிதாக வேலை இல்லை. இதனால் இந்திய அணி பேட்டிங் வரிசை நீளப்படுத்த விரும்பினால், சஞ்சு சாம்சனை மற்றும் ஒரு பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கலாம்.

மேலும் இந்த ஆடுகளம் சுழற்சிக்கும் சாதகமாக பார்க்கப்படுவதால் இந்திய அணிய தனது கடந்த போட்டியில் குல்தீப் யாதவை பயன்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முக்கியமாக கருதப்படுவதால் ஒரு பிரதான பந்துவீச்சை பயன்படுத்துவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனால் முகமது சிராஜ்க்கு பதிலாக குல்தீப் யாதவை பிரதான சுழற் பந்துவீச்சாளராக பயன்படுத்தலாம்.பாகிஸ்தான் அணியும் தனது அடுத்த போட்டியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதே அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:காயத்தால் ரோஹித் சர்மா விலகல்? கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளாரா பும்ரா.? சஞ்சனாவின் வலைதள பதிவு

இருப்பினும் இந்திய அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் பெரும்பாலும் அணியின் பிளேயிங் லெவலில் மாற்றம் இருக்காது. இருப்பினும் இத்தகை மாற்றங்களை செய்தால் அணியின் பேட்டிங் வரிசையும் மற்றும் பந்து வீச்சின் பலமும் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோத உள்ள இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles