தோனி என் கூடவே இருந்தாரு.. சில விஷயங்கள் எனக்கு அவர்தான் சொல்லிக் கொடுத்தார் – பண்ட் பேட்டி

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகத் திகழும் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்து சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்குள் நுழைந்த போது தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை மகேந்திர சிங் தோனி வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டும் செயல்படாமல், கேப்டன் பொறுப்பையும் ஏற்று பினிஷர் ரோலையும் மிகச்சிறப்பாக கையாண்டார். அவரது ஓய்விற்குப் பிறகு ரிஷப் பண்ட் அணிக்குள் வந்ததால் அவர் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டது. அவரது இடத்தை உடனே நிரப்புவது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் அதற்குபின் இந்திய அணிக்குள் வர அனுபவமின்மை காரணமாக தொடக்கத்தில் சில தவறுகளையும் செய்தார். அவர் தவறுகள் செய்யும்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி என பெரும் கூச்சலிட்டு அவரை பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இதனால் தான் மனம் உடைந்து அழுததாகவும் ரிசப் பண்ட் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் தனக்கு மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியேயும் எவ்வளவு பெரிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார் என்பதையும் ரிஷப் பண்ட் கூறி இருக்கிறார். மேலும் தான் சொந்தமாக சிந்தித்து செயல்படுவதற்கும் முழு சுதந்திரத்தையும், ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறார் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரிஷப் பண்ட் விரிவாக கூறும்பொழுது “கிரிக்கெட் களத்திற்கு உள்ளே மட்டுமல்ல களத்திற்கு வெளியேயும் மகேந்திர சிங் தோனி எனக்கு எப்போதுமே மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார். எனக்கு சூழ்நிலைகள் சரியில்லாத போது தொடர்ந்து அவர் என்னுடனே இருந்தார்.நான் சொந்தமாக சிந்தித்து செயல்படுவதற்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தோனி கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:தனக்கும் சானியா மிர்சாவுக்கும் திருமணமா.? முதன்முறையாக மௌனம் கலைத்து பதில் கூறிய முகமது சமி

நீங்கள் முக்கிய முடிவை தேர்ந்தெடுக்கும் நாளில் நீங்கள் எதைச் செய்ய நினைத்தாலும், தோனி உங்களோடு இருக்கும்போது அந்த வேலை மிக எளிதாக இருக்கும். தோனியிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம். எனக்கு விக்கெட் கீப்பிங் பணியிலும் சில சந்தேகங்கள் இருந்தது. அதையும் தோனியிடம் கேட்டு நான் தெளிவு பெற்று இருக்கிறேன். தோனி விக்கெட் கீப்பிங்கின் முறையையே மாற்றி இருக்கிறார். நான் இந்திய அணியில் சேரும்போது என்னுடைய வயது 18. யாரும் என்னை இளம் வீரராக நடத்தாமல் அணியில் ஒருவராகவே பார்த்தனர். அது எனக்கு நல்ல சூழலை கொடுத்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles