தனக்கும் சானியா மிர்சாவுக்கும் திருமணமா.? முதன்முறையாக மௌனம் கலைத்து பதில் கூறிய முகமது சமி

காயத்திலிருந்து தற்போது குணமாகி வரும் இந்திய கிரிக்கெட் வீரரான முகமது சமி தற்போது வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார். இந்த சூழ்நிலையில் தனக்கும் சானியா மிர்சாவுக்கும் திருமணம் என்ற வதந்தி பரவிய நிலையில் தற்போது அது குறித்து சமி மௌனம் கலைத்திருக்கிறார்.

- Advertisement -

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் வந்த சமி அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வலை பயிற்சிகளை பந்து வீச ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனை ஆன சானியா மிர்சா தனது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

முகமது சமியும் தற்போது தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்த நிலையில், தற்போது சமியும் இது குறித்து பேசி இருக்கிறார்.

முகமது சமி இது குறித்து கூறும் பொழுது “சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை தவிர்க்கவும். இது வித்தியாசமாக இருக்கிறது. சிலர் வேண்டுமென்ற இது போன்ற தகவல்களை பரப்புகிறார்கள். கைபேசியை திறந்தாலே இது போன்ற மீம்ஸ்கள்தான் அதிகமாக வருகின்றன. எனவே நான் வேறு என்ன செய்ய முடியும். அந்த மீம்ஸ்கள் அனைத்துமே வேடிக்கையாக வேறு வேலை இல்லாமல் உருவாக்கப்பட்டவை என்றே நான் கூற விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க:டாட்டூ குத்திகிட்டு.. நடிகையோட ஊர் சுத்துனாதான் டீம்ல இடம் கிடைக்குமா.. ருத்ராஜ் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத் காட்டமான பேட்டி

இது போன்ற நபர்கள் இந்த செய்திகளை அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் வெளியிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். உண்மையிலேயே தைரியம் இருந்தால் அவர்கள் இதை அதிகாரமான பக்கத்தில் வெளியிடச் சொல்லுங்கள். அதற்கு நான் பதில் கூறுகிறேன். இது போன்ற வேலைகளை விட்டுவிட்டு வாழ்வில் வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள். நல்ல மனிதர்களாக இருங்கள், அடுத்தவர்களுக்கு உதவுங்கள் அப்போது நீங்கள் நல்லவர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். காயத்தினால் சமி ஐபிஎல் தொடரையும், டி20 உலக கோப்பை தொடரையும் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles