டாட்டூ குத்திகிட்டு.. நடிகையோட ஊர் சுத்துனாதான் டீம்ல இடம் கிடைக்குமா.. ருத்ராஜ் இடம்பெறாதது குறித்து பத்ரிநாத் காட்டமான பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு வடிவ கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ருத்ராஜ் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சில காட்டமான விமர்சனங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருத்ராஜ் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் இரண்டிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் அவரை விட குறைவான புள்ளி விவரங்கள் வைத்திருக்கும் கில் இந்திய அணியின் துணை கேப்டன் ஆகவே நியமிக்கப்பட்டிருக்கிறார். ருதுராஜ் ரோகித் சர்மாவிற்கு பிறகு நிரந்தர துவக்க ஆட்டக்காரர் ஆகவே இருக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு அணியிலேயே இடம் கிடைக்கவில்லை. ஜெய்ஸ்வால் தற்போது நிரந்தர துவக்க ஆட்டக்காரராக மாறி இருக்கும் நிலையில் கில்லும் தற்போது துணை கேப்டனாக ஆக்கப்பட்டிருப்பதால் ருத்ராஜின் டி20 கதவுகள் மூடப்பட்டதாகவே சொல்லப்படுகிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “ருத்ராஜ் கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அணிக்காகவும், உள்நாட்டு கிரிக்கெட் தொடரிலும் மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தொடர்ந்து நல்ல முறையில் பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் அவரை இலங்கை அணிக்கு எதிரான தொடரில் எதற்காக தேர்வு செய்யவில்லை என்று புரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க:பைனல்ல நான் அவுட் ஆகி வெளியே போகும்போது.. கோலி ரோஹித்தை விட இவர்தான் நம்பிக்கை கொடுத்தார்- அக்சார் பேட்டி

கடைசி ஏழு போட்டியில் ருத்ராஜின் ஸ்ட்ரைக் ரேட் 158, பேட்டிங் ஆவரேஜ் 71 ஆக இருக்கும் நிலையில் இதை விட வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் உடம்பில் டாட்டூகள் குத்திக் கொள்வது, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது, ஒரு மோசமான பையன் என்பது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே தேர்வாக முடியுமா?என்று தெரியவில்லை. ருத்ராஜ் இந்திய அணியில் இருக்க வேண்டிய ஒரு வீரர்” என்று கூறி இருக்கிறார். டி20 தொடரில் தான் இடமில்லை என்று பார்த்தால் ஒரு நாள் தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணியின் கதவுகள் திறக்க ருத்ராஜ் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்பது போல் தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles