இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு எதிரி இந்திய அணியே தான் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி விளையாட உள்ள நிலையில் இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று இந்திய நிர்வாகம் கோரிக்கை விடுத்து வருவது அவர்களுக்கே தற்போது எதிராக மாறி உள்ளது. இந்திய அணியை எதிரணி சுழற் பந்துவீச்சாளர்கள் நன்றாக பயன்படுத்தி இந்திய அணியை தோற்கடிக்கிறார்கள்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரிலிருந்து விலகு.. இல்லனா இந்திய அணியின் கேப்டன் பதவி உனக்கு இல்லை.. கில்லை எச்சரிக்கும் கௌதம் கம்பீர்
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்போது ” தங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று இந்திய அணி இவ்வாறு ஆடுகளம் அமைப்பது எதிரணி சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் உதவி செய்யும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை சிறப்பாக கையாளவில்லை என்பதுதான் முற்றிலுமான உண்மை. ஒரு காலத்தில் இப்படி கிடையாது இந்திய அணிக்கு எதிரி தென்னாப்பிரிக்கா கிடையாது இந்திய அணியே தான்” என்று கூறி இருக்கிறார்.

