இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கில்லுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்து செய்திகள் வெளிவரும் நிலையில் அதனை கம்பீர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மான் கில் பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக மூன்று வடிவ ஃபார்மேட்டிலும் விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் கேப்டன் ஆகவும் டி20 தொடரில் வீரராகவும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பங்கேற்று வருவதால் அவருக்கான பணிச்சுமை என்பது அதிக அளவில் உள்ளது என்று பலர் கூறி வருகிறார்கள். இதனால்தான் அவருக்கு கழுத்துப் பகுதியில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவருக்கு போதிய ஓய்வு தேவை என்று பலர் கூறிவரும் நிலையில் அப்படி ஓய்வு தேவைப்பட்டால் ஐபிஎல் தொடரிலிருந்து கில் விலகலாம் என்று கம்பீர் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல.. சிஎஸ்கேவுக்கு வந்ததுமே சஞ்சு சாம்சன் செய்த செயல்.. வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா எடுத்து பேட்டியில் கம்பீர் கூறியதாவது “கில்லுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகலாம். ஐபிஎல் அணியை வழி நடத்துவது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் இந்திய அணியை வழிநடத்த விரும்பவில்லை என்றால் வழிநடத்த வேண்டாம். நீங்கள் இந்திய அணிக்காக விளையாடும் போது உடல் தகுதியுடன் இருந்தால் மனரீதியாக சோர்வடைய மாட்டீர்கள்” என்று கம்பீர் பேசியிருக்கிறார்.

