ரிக்கி பாண்டிங் கொடுக்கும் நம்பிக்கை.. என்னை ஜாம்பவான் ரேஞ்சுக்கு தோன்ற வைத்துவிடுவார்.. உற்சாகமான ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்த 11 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேற ஒரு அணி என்றால், அது பஞ்சாப் கிங்ஸ் மட்டும்தான். அதேபோல் 17 கேப்டன்கள், 11 பயிற்சியாளர்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் டிசைன் டிசைனாக பஞ்சாப் அணி களமிறங்கும். ஒவ்வொரு சீசனுக்கு முன்பாகவும் பலமான அணியாக பார்க்கப்படும் பஞ்சாப் கிங்ஸ், பின்னர் ஜோக்கராக மாறிவிடும்.

- Advertisement -

ஆனால் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணி செய்துள்ள மாற்றங்கள் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மெகா ஏலத்தில் ரூ.26.75 கோடி கொடுத்து ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி பிடிவாதமாக வாங்கி இருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

- Advertisement -

அனைவரும் ரிஷப் பண்ட்-ஐ மட்டுமே ரிக்கி பாண்டிங் வாங்குவார் என்று எதிர்பார்த்த போது, ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கினார். ஏற்கனவே டெல்லி அணியில் இருவரும் பணியாற்றி இருப்பதால், பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ரிக்கி பாண்டிங் உடன் பணியாற்றுவது குறித்து பேசும் போது, சொந்த அணியின் அனைத்து வீரர்களுக்கும் ரிக்கி பாண்டிங் மிகப்பெரிய ஆதரவாக இருப்பார். அவருடன் முதல்முறையாக பணியாற்றிய போதே, அவர் நான் ஏதோ மிகப்பெரிய வீரர் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கிவிட்டார்.

- Advertisement -

பாண்டிங் கொடுத்த நம்பிக்கை

என்னால் டி20 கிரிக்கெட்டில் நிபுணத்துவம் பெற முடியும் என்று நம்பிக்கை கொள்ள வைத்தார். அவர் ஒரு வீரருக்குள் ஏற்படுத்தும் நம்பிக்கை அதீதமானது. அதேபோல் மிகச்சிறந்த மனிதரும் கூட என்று தெரிவித்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது, ஸ்ரேயாஸ் ஐயர் மரியாதையான சிறந்த குணங்களை கொண்டவர். ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன்.

அதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். சில நாட்களுக்கு முன்பாகதான் அவர் பயிற்சி முகாமில் சேர்ந்தார். ஆனால் ஒரு தலைவனாக, ஒரு கேப்டனாக அணியினர் மத்தியில் மதிக்கப்படுகிறார். முதல் போட்டியில் ஆடுவதற்கு முன்பாகவே நிச்சயம் அவரின் தாக்கல் வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles