இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் விராட் கோலிக்கு இந்த தண்டனை போதுமானதாக இல்லை என சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது அதன் தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் இது விராட் கோலி மோதும் படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது கிட்டத்தட்ட உலக மக்கள் அனைவரும் உற்று நோக்கிய நிலையில் விராட் கோலி இதை வேண்டுமென்றே செய்தார் என இதை லெவல் 1 குற்றமாக ஐசிசி அறிவித்தது.
இந்த நிலையில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்த நிலையில் ஒரு போட்டியில் இருந்து விளையாட தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக கிரிக்கெட்டில் ஒரு வீரர் இன்னொரு வீரருடன் வேண்டுமென்றே மோதலில் ஈடுபடும் போது லெவல் 2 குற்றமாக பார்க்கப்பட்டு சம்பளத்திலிருந்து 50 அல்லது 100% அபராதமாக விதிக்கப்படும். மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும் ஏற்படலாம்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலிக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து ரிக்கி பாண்டிங் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது ” விராட் கோலிக்கு விதிக்கப்பட்ட அபராதம் தனிப்பட்ட முறையில் எனக்கு இது போதுமானதாக தெரியவில்லை. கிரிக்கெட்டில் இது போன்று விஷயங்கள் இதற்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. அதற்கு 15 முதல் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆனால் நேற்று நடைபெற்ற சம்பவத்தின் வீரியம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இதை உலகம் முழுவதும் உற்று நோக்கியது. மேலும் கிரிக்கெட்டை விரும்பக்கூடிய மக்கள் இதை கவனித்து இருப்பார்கள்.
இதையும் படிங்க:கோலிய தப்பா நினைக்காதீங்க.. உண்மையா அங்க நடந்த கதையே வேற.. மறைக்காம காரணத்த சொல்றேன்.. 19 வயது ஆஸ்திரேலிய வீரர் பேட்டி
இதற்கு முன்பு இது போன்ற விஷயங்களில் சில வீரர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் இது விராட் கோலியின் விஷயத்தை பொறுத்த வரை முற்றிலும் வித்தியாசமானது. அவரை உலகம் முழுவதும் ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். எனவே விராட் கோலி இது போன்ற விஷயங்களில் இனி கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

